Aug 30, 2026 - 07:12 PM





எம்பிலிபிட்டிய காகித தொழிற்சாலையின் கழிவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று (30) மாலை 3:20 மணியளவில் இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ பரவாமல் தடுப்பதற்காகக் காகித தொழிற்சாலையின் தீயணைப்புப் பிரிவு, இராணுவம், பொலிஸ், எம்பிலிபிட்டிய நகர சபை மற்றும் செவனகல சர்க்கரை தொழிற்சாலையின் தீயணைப்புப் பிரிவு ஆகியவை இணைந்து தீவிர முயற்சி மேற்கொண்டு, தற்போது தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளன.
காகித தொழிற்சாலைக்கு கொண்டு வரப்பட்ட கழிவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதியிலேயே இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.























