Header Logo
SLIC
செய்திகள்
புதிய கல்விச் சீர்திருத்தம்: திட்டமுமில்லை, தயார்நிலையும் இல்லை - சாடுகிறார் ஜோசப் ஸ்டாலின்!

Aug 30, 2026 - 03:53 PM

புதிய கல்விச் சீர்திருத்தம்: திட்டமுமில்லை, தயார்நிலையும் இல்லை - சாடுகிறார் ஜோசப் ஸ்டாலின்!
Mobitel Inner 1278
EDEX Inner

அடுத்த ஆண்டு முதல் புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் இதுவரை முறையான தயார்நிலை இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 

புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கான ஆசிரியர் பயிற்சி நடவடிக்கைகளும் இதுவரை நிறைவடையவில்லை என அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். 

அடுத்த ஆண்டு முதல் முதலாம் மற்றும் 6 ஆம் தரங்களுக்கு புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தற்போது திட்டமிட்டுள்ளது. 

எனினும், அதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டுகின்றார். 

"இந்தச் சீர்திருத்தங்கள் அடுத்த வருடம் கொண்டுவரப்பட்டாலும், 1ஆம் மற்றும் 6ஆம் தரங்களுக்கான சீர்திருத்தங்கள் எப்படியும் அடுத்த வருடம் வரவுள்ளன. ஆனால், அதற்கான ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கும் செயற்பாடு இன்னும் மந்தகதியிலேயே இடம்பெறுகின்றது. இந்தச் சீர்திருத்தங்கள் தெளிவாக கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் கொண்டுவந்த சீர்திருத்தங்களின் நீட்சியாகவே உள்ளன. அமுல்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாகவே இது காணப்படுகின்றது. அதேபோன்று, இந்தக் கல்விச் சீர்திருத்தங்களுக்காக விசேட கொள்கைக் கட்டமைப்பொன்றை உருவாக்குமாறு கடந்த நாட்களில் ஜனாதிபதி தேசிய கல்வி ஆணைக்குழுவிடம் தெரிவித்திருந்தார். ஆனால் தேசிய கல்வி ஆணைக்குழு அதனைத் தயாரித்து முடித்துள்ளதா என்பது எமக்குத் தெரியாது. அது இன்னும் மக்கள் மத்தியில் வரவுமில்லை, அதுபற்றிப் பேசப்படவுமில்லை. எந்தவொரு திட்டமுமின்றி கடந்த அரசாங்கங்கள் கொண்டுவந்த சீர்திருத்தங்களையே இவர்கள் முன்னெடுத்துச் செல்கின்றனர். அதற்கான எவ்வித தயார்நிலையும் இன்னும் தென்படவில்லை. இது ஒரு பாரிய நெருக்கடியாக மாறியுள்ளது. தற்போதைய கல்வி முறையில் பல நடைமுறை நெருக்கடிகள் காணப்படுகின்ற நிலையில், பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்காத சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதாயின் அது குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டும்." என்றார்.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278