Header Logo
SLIC
உலகம்
தான்சானியாவில் வெடித்தது மோதல்: 700 பேர் பலி என அச்சம்

Nov 1, 2025 - 10:36 AM

தான்சானியாவில் வெடித்தது மோதல்: 700 பேர் பலி என அச்சம்
Mobitel Inner 1278
EDEX Inner

தான்சானியாவில் ஜனாதிபதி தேர்தல் முடிவை ஏற்க மறுத்து வெடித்த வன்முறையில் கடந்த 3 நாட்களில் 700 பேர் இறந்திருக்கலாம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. 

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் நேற்று கடந்த 29 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அதில் தற்போதைய ஜனாதிபதியான சிசிஎம் கட்சியைச்சேர்ந்த சமியா சுலுஹூ ஹசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

ஆனால், இந்த தேர்தல் முடிவை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி, தேர்தலில் மோசடி நடந்ததாக குற்றம்சாட்டியது. இதனால், அந்நாட்டில் போராட்டம் வெடித்துள்ளது. 

எதிர்க்கட்சியினர் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதில் வன்முறை வெடித்துள்ளது. டார் எஸ் சலாம், மவான்சா, டொடோமா உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடக்கிறது. 

போராட்டக்காரர்கள் வீதிகளில் டயர்களை எரித்தனர். அவர்களை பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால், போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதனையடுத்து இராணுவத்தினர் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். 

இதன் காரணமாக அந்நாட்டில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதுடன், இணையதள சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு நிருபர்கள் செய்தி சேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களாக அங்கு நடக்கும் மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என எதிர்க்கட்சி தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தர் எஸ் சலாம் பகுதியில் 350 மற்றும் மவான்சா பகுதியில் 200க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278