Header Logo
SLIC
கிழக்கு
இலங்கை பட்டதாரிகள் சங்கதினால் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

Nov 1, 2025 - 01:27 PM

இலங்கை பட்டதாரிகள் சங்கதினால் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!
Mobitel Inner 1278
EDEX Inner

ஐந்து வருடங்கள் பொறுத்தது போதும் அனைவரும் ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் இலங்கை பட்டதாரிகள் சங்கதினால் இன்று (01) மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப்பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

இலங்கை பட்டதாரிகள் சங்கதின் தலைவர் கணேசன் அனீரன் தலைமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியானது திருமலை வீதி சுற்றுவட்டத்தில் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு நகரில் உள்ள காந்தி பூங்காவை சென்றடைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர். 

மட்டக்களப்பில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடந்த ஐந்து வருடங்களாக கடமையாற்றிவரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுமார் 200 இற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர். 

ஐந்து வருட அநீதிக்கு நியாயம் வேண்டு, போட்டிப் பரீட்சை மட்டும்தான் தகுதியா?, அரசே பாடசாலையில் ஆசிரியர் பணி புரிந்து பல மாற்றங்களைக் கொண்டு வந்த எமக்கு ஆசிரியர் நியமனம் வழங்கு, மாணவர்களின் உள்ளங்களைப் புரிந்து கொண்ட எங்களை ஏமாற்றாதே!, ஜனநாயகம் மலர நீதி வழங்கு, அன்புள்ள அநுர அவர்களே கருணை மிகு ஹரினி அவர்களே ஆசிரியராகும் எங்கள் பணியை உறுதிப்படுத்தி தாருங்கள் போன்ற வாசகங்களை ஏந்தியவாறு, கோசமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இலங்கை பூராகவும் 16,600 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பாடசாலைகளில் இணைக்கப்பட்டு கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதுடன், இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களில் 1,400 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278