Header Logo

செய்திகள்
வரவு செலவுத் திட்ட உரை ஆரம்பம்

Nov 7, 2025 - 06:48 PM -

0

 வரவு செலவுத் திட்ட உரை ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை ஆரம்பமாகியுள்ளது. 

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றில் வரவு செலவுத் திட்ட உரையை தற்சமயம் ஆரம்பித்துள்ளார். 

இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வைக்கும் இரண்டாவது வரவு செலவுத் திட்ட உரை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

ஜனாதிபதி தனது வரவு செலவுத் திட்ட உரையில்,

 

2025 இன் இறுதியில் இலங்கை மீண்டும் பழைய நிலையை அடையும்.

தேர்தல் கூட்டம் ஒன்றுக்கு வராவிட்டால் மக்களுக்கான சமூர்த்தி நீக்கப்பட்டது.

அரச வருமானம் 16%  ஆக அதிகரிக்கும் என எதிர்ப்பார்ப்பு.

 

வெளிநாட்டு கையிருப்பை இந்த வருட இறுதிக்குள் 7 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற நிலைக்கு கொண்டு வர எதிர்பார்ப்பு.

 

அரச ஊழியர்களின் சம்பளத்தை 3 கட்டங்களாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் கடனை 87% ஆகக் குறைக்க அரசு எதிர்பார்ப்பதோடு,  குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக வழங்கப்படும் அஸ்வெசுமவை 2026 ஆம் ஆண்டு மீண்டும் மீளாய்வு செய்ய நடவடிக்கை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு.

 

மக்களுக்கு எதிராக எவரேனும் தவறு இழைத்திருப்பார்களாயின், அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு அமைய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 


அத்துடன், இந்த விடயத்தில் யாருக்கும் பாரபட்சம் காட்டப்படமாட்டாது.

2029 ஆம் ஆண்டு வரையில் தேசிய அபிவிருத்தி ஏற்றுமதி திட்டம் உள்ளது.

 

2032 ஆம் ஆண்டு தேசிய உற்பத்திக்கு சமமாக கடனை 90 வீதம் குறைப்பதற்கு எதிர்பார்ப்பு.

2025 ஆண்டில் இறக்குமதி செலவினம் அதிகரிப்பு.

அதற்கமைய, 430 மில்லியன் அமெரிக்க டொலரால் இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளது.

 

2026 ஆம் ஆண்டு 15.3 மற்றும் 2027 ஆம் 15.4 வீதங்களில் தேசிய வருமானத்தை முகாமைத்துவம் செய்ய எதிர்பார்த்துள்ளோம். இந்த வருடம் இதுவரை 1,373 மில்லியன் டொலர்கள் வரை வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் வேலையின்மை வீதத்தை 4.5 இல் இருந்து 3.8 ஆக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தை காட்டிலும் அரச வருமானம் 900 பில்லியன் ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரச முதலீட்டை 4 சதவீதமாக அதிகரிப்பதற்கான திட்டம் உள்ளது.

முதலீட்டு வலயங்களுக்கான சேவை அபிவிருத்திக்காக 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

 

காணி தகவல் உட்பட மத்திய டிஜிட்டல் கட்டமைப்புக்காக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

வௌிநாட்டு முதலீட்டாளர்களுக்காக வதிவிட விசா முறைமை அறிமுகப்படுத்தப்படும்.


சர்வதேச வர்த்தக உடன்படிக்கைக்கு ஒப்பான புதிய முறைமை.

சிறிய மற்றும் நடுத்த அளவிலான தொழில்முனைவோருக்கு 5,900 மில்லியன் ரூபாய் கடன் வழங்க ஒதுக்கிடப்படும். 

தொழிற்துறை அபிவிருத்திக்காக மேலும் 1,000 மில்லியன் ஒதுக்கப்படும்.

 

விவசாய அபிவிருத்திக்காக 1,700 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்படும்.

நீரியல் வளப் பகுதிகளை உள்ளடக்கிய சுற்றுலா தொழிற்துறை அபிவிருத்திக்காக 3,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்படும்.

அடுத்த வருடத்திற்கான பல்வேறு கடன் வசதிகளுக்காக 80,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

சுற்றுலா தொழில் நிபுணர்களை உருவாக்க 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.


உள்ளக விமான சேவைகளை விரிவுப்படுத்த அவதானம்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை விரிவுப்படுத்தும் வேலைத்திட்டத்தை அடுத்த வருடம் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை.

டிஜிட்டல் பொருளாரத்தை மேம்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கு 25,500 மில்லியனுக்கும் அதிக முதலீட்டை பெற எதிர்ப்பார்ப்பு. 

டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்காக டிஜிட்டல் பொருளாதார பேரவை ஸ்தாபிக்கப்படும். 

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும். பிரஜைகளின் தரவுகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 

கிவ் ஆர் குறியீடுக்காக 5,000 க்கு குறைந்த கொடுக்கல் வாங்கலுக்கான சேவை கட்டணம் நீக்கப்படும். 

AI தரவு மத்திய நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். 

அஸ்வெசும பெறும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளுக்காக இணைய சேவை வவுச்சர் வழங்கப்படும்.  

டிஜிட்டல் தொழில்நுட்ப கோபுரங்களை அமைப்பதற்கு முதலீட்டு வரியை 5 வருடங்களுக்கு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

க்ளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்காக 6,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

 

விஷ போதைப்பொருளை ஒழிப்பதற்கான சுற்றிவளைப்புகளுக்கு 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.


பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு 2,500 ரூபாயினால் அதிகரிக்கப்படும்.


தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிலும் ஆசிரிய மாணவர்களுக்கான கொடுப்பனவு 2,500 ரூபாயினால் அதிகரிக்கப்படும்.


விசேட தேவையுடைய பிள்ளைகள் உயர் கல்வியை பெறுவதற்காக 5,000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.


நாடளாவிய ரீதியில் உள்ள தொழிற் பயிற்சி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு 8,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப்பனவை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 1,550 ஆக அதிகரிப்பதற்கு யோசனை.


அதில் வரவுக் கொடுப்பனவுக்கான 200 ரூபாவை அரசாங்கம் வழங்கும்.


82 ஆதார வைத்தியசாலைகளை 5 வருடங்களில் அபிவிருத்தி செய்வதற்கு 31,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.


16 மாடிகளைக் கொண்ட தேசிய இதய சிகிச்சை மையத்தை நிர்மாணிப்பதற்கு 200 மில்லியன் ஒதுக்கப்படும். 


அதன் மொத்த செலவினம் 12,000 மில்லியன் ரூபாவாகும். 


சுவசெரிய நோயாளர் காவு வண்டி சேவைக்காக 4.2 பில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்படும்.

 

இளைஞர்களிடைய விளையாட்டு கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக 1,800 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.


அதேநேரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விளையாட்டு கட்டிட தொகுதிகளை அபிவிருத்தி செய்ய 100 மில்லியன் ஒதுக்கிடப்படும்.

 

2030 இல் உள்நாட்டு பால் தேவையில் 75 சதவீதத்தை பூர்த்தி செய்யும் இலக்கை அடையும் வகையில் தேசிய பாலுற்பத்தி நிகழ்ச்சித் திட்டம் வடிவமைப்பு.


சிறு மற்றும் நடுத்தர அளவிலான கால்நடை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சாத்தியவள ஆய்வு உள்ளிட்ட ஆரம்பப் பணிகளுக்காக 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.


பாதுகாப்பான கடற்பயணங்களை உறுதிப்படுத்தல் மற்றும் துறைமுகங்களில் காணப்படும் நெரிசல்களை குறைத்தல் என்பனவற்றை இலக்காகக் கொண்டு வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு 350 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்படும்.

 

மத்திய அதிவேக வீதியின் கடவத்தை - மீரிகமை வீதிப் பகுதியின் நிர்மாணப் பணிகளுக்காக 2026 ஆம் ஆண்டுக்கு 66,150 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்படும்.

 

பரந்த அளவிலான வீதிப் பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றை அமுல் செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக மேலும் 1,000 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்குவதற்கு முன்மொழிவு.

 

ஹட்டன் நகரில் நிலவும் அதிக போக்குவரத்து நெரிசலுக்கு பொருத்தமான தீர்வுகளை வழங்குவதற்கு 2026 ஆம் ஆண்டில் அவசியமான நகரத் திட்டம் தயாரிக்கப்படும்.
 

அங்கு தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலுக்கான தற்காலிக தீர்வை வழங்கும் நோக்கில் வரவு செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
 

அடுத்த வருடத்தில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகள் அடங்கலாக 27,000 புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளது.

 

இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் மலையக பகுதிகளில் நிர்மாணிக்கப்படும் 2,000 வீடுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 4,290 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

 

அரச சேவைக்கு 75,000 பேரை உரிய முறைமையின் கீழ் புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

அரச ஊழியர்களுக்கான இரண்டாம் கட்ட சம்பள அதிகரிப்பிற்காக 110 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.


இந்த இரண்டாம் கட்ட சம்பள அதிகரிப்பு எதிர்வரும் ஜனவரி முதல் வழங்கப்படும்.


அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணத்தை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 


அதன்படி இதுவரை 10,000 ரூபாவாக வழங்கப்பட்ட பண்டிகை முற்பணத் தொகையினை 15,000 ரூபாவாக அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.


சலுகை வட்டி விகிதத்தில் அரச ஊழியர்களுக்கான வீடமைப்பு மற்றும் ஆதனக் கடன்களை வழங்க வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.


செல்லப்பிராணிகளை அடக்கம் செய்தல், தகனம் செய்தல் மற்றும் தெரு நாய்கள் பராமரிப்பதற்கான சேவைகளை வழங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில் கொழும்பு மற்றும் பியகமை உள்ளூராட்சி அதிகார சபைகளில் முன்னோடிக் கருத்திட்டமொன்றை செயற்படுத்த ரூபா 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

 

எனினும் அந்த தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

 

எல்லை நிர்ணயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தேர்தலை நடத்தும் திகதியை உறுதியாக கூற முடியாது. 

 

தற்போதுள்ள சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை கொண்டுவர வேண்டியுள்ள தேவையுள்ளது. 

 

இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 

தற்சமயம் நடைமுறையில் உள்ள 0%, 15%, 20% தீர்வை வரி விகிதங்களை 20​26 ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வரும் வருமாறு தீர்வை விகிதங்களை 0%, 10%, 20%, 30% என்றவாறு தேசிய தீர்வை கொள்ளையை நடைமுறைப்படுத்த முன்மொழிவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

 

இறக்குமதி செய்யப்படும் துணி மீதான செஸ் வரியை நீக்கி பெறுமதி சேர் வரியை விதிக்க முன்மொழிவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

 

அடுத்த ஆண்டில் இலங்கையின் கடன்பெறுதல் வரையறையை 3,740 பில்லியன் ரூபாவாக 60 பில்லியன் ரூபாயினால் குறைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

 

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் மீதான விசேட பண்ட அறவீட்டை நீக்கி அதற்கு பதிலாக பெறுமதி சேர் வரி உட்பட பொதுவான வரிக் கட்டமைப்பை விதிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. 

 

இந்த முன்மொழிவானது 2025 ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் முன்மொழியப்பட்டுள்ளது.

 

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை தனியொரு அலுவலக வளாகத்தில் ஸ்தாபிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

புதிய அலுகலக கட்டிடத் தொகுதியை ஸ்தாபிப்பதற்காக 2,000 மில்லியன் ரூபாயினை ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

 

கல்வி இலக்குகளை அடைவதில் அதிபர்களின் நிர்வாகப் பொறுப்புகள் மற்றும் பொறுப்புகூறலை அங்கீகரிக்கும் வகையில், அதிபர் பதவியில் பணியாற்றும் அதிபர்களுக்கு வழங்கப்படும் அதிபர் கொடுப்பனவை 1,500 ரூபாவால் அதிகரிக்கவும் கல்வி இலக்குகளை அடைவதை அதிகரிப்பதற்காக 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 


 

 நேரலையை பார்வையிட,

 


MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title