Header Logo

செய்திகள்
தயாளினி திலீபன் வழக்கில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

Jun 4, 2026 - 11:11 AM -

0

தயாளினி திலீபன் வழக்கில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை வழக்கில் சாட்சியங்கள், அவதானக் குறிப்புகள் மற்றும் நீதிமன்றச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, விரிவுரையாளரின் வீட்டிலேயே இக்குற்றச் சம்பவம் நடைபெற்றுள்ளது தெளிவாகுவதுடன், விரிவுரையாளர் கையினால் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதியாகிறது என நீதிமன்றத்தில் வெளிக்கொணரப்பட்டது.

குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (03)  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிவான் எஸ்.லெனின்குமார் இதனை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், தொடர் நடவடிக்கைகளுக்காக வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகள் ஆகியோரின் விளக்கமறியல் காலத்தை அன்றைய தினம் வரை நீடித்து உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணைகளின் போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் வழிகாட்டலில் பெனிஸ்லஸ் துஷானும், முதலாவது சந்தேக நபரான விரிவுரையாளரின் மருமகன் சார்பில் சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரனும், இரண்டாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள சிரேஷ்ட விரிவுரையாளரின் மகள் சார்பில் சட்டத்தரணி சமந்த அத்துக்கோரளவின் வழிகாட்டலில் மற்றொரு சட்டத்தரணியும் முன்னிலையாகியிருந்தனர்.
 
--

MOST READ

காணொளி
23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

title