Header Logo

இந்தியா
டெல்லியில் நடத்தப்பட்டது தற்கொலை குண்டுத் தாக்குதலா?

Nov 11, 2025 - 09:06 AM -

0

டெல்லியில் நடத்தப்பட்டது தற்கொலை குண்டுத் தாக்குதலா?

டெல்லி செங்கோட்டைக்கு அருகில் நேற்று (10) இடம்பெற்ற கார் வெடிப்பு ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது. 

நேற்று மாலை குறித்த காரில் திடிரென வெடிப்பு ஏற்பட்ட நிலையில் 10 பேர் உயிரிழந்தனர். 

அத்துடன் இந்த சம்பவத்தில் 24 பேர் வரை காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் ஏற்பட்ட தீப்பரவலில் சேதமடைந்துள்ளன. 

இந்நிலையில் இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் இந்திய தேசிய புலனாய்வு பிரிவினர், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினரும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

அதேநேரம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் தடவியல் பரிசோதனைகளும் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. 

பொலிஸார் முன்னெடுத்து வரும் விசாரணையின் அடிப்படையில் வெடிப்பு ஏற்பட்ட கார் தொடர்பான சிசிடிவி காணொளி ஒன்றும் வௌியிடப்பட்டுள்ளது. 

அந்த காணொளியில் காரை செலுத்தி வரும் நபர் குறித்து ஆராயப்படுவதுடன் இது தற்கொலை குண்டுத் தாக்குதலா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. 

செங்கோட்டைக்கு அருகில் குறித்த கார் மாலையில் 3 மணியளவில் பிரவேசித்து அங்கேயே தரித்து நின்றதுடன் மாலை 6 மணியளவிலேயே அங்கிருந்து புறப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

இந்தநிலையில் சிசிடிவி காணொளி அடிப்படையில் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Comments
0

MOST READ

காணொளி
அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அகழ்வு

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அகழ்வு

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

title