Nov 12, 2025 - 12:40 PM -
0
அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு ஒன்று சிறிய கொம்புகளைக் கொண்ட புதிய உள்நாட்டுத் தேனீ இனத்தைக் கண்டுபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த புதிய தேனீ இனமானது ஒரு பிசாசு போன்ற கொம்புகளைக் கொண்டிருப்பதால், இதற்கு 'லூசிஃபர்' (Lucifer) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தத் தனித்துவமான 'கொம்புகள்' பெண் தேனீக்களுக்கு மட்டுமே காணப்படுகின்றன.
அதேபோல், இந்த தேனீக்களுக்குப் பயன்படுத்தப்படும் 'லூசிஃபர்' என்ற பெயர், லத்தீன் மொழியில் "ஒளியைத் தாங்கி வருபவர்" என்ற அர்த்தத்தைக் கொண்டுள்ளது.
இந்த புதிய தேனீ இனமானது, வாழ்விட மாற்றங்கள் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால் அழிந்து போகும் அபாயத்தை எதிர்கொள்ளக்கூடும் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

