Header Logo

வடக்கு
வடமாகாண மரநடுகை மாதம் ஆரம்பிப்பு

Nov 15, 2025 - 10:59 AM -

0

வடமாகாண மரநடுகை மாதம் ஆரம்பிப்பு

ஆளுக்கு ஒரு மரம் நடுவோம் நாளுக்கு ஒரு வரம் பெறுவோம் என்ற தொனிப்பொருளில் வட மாகாண மரநடுகை மாதம் நேற்று (14) தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்திய தமிழ்நாடு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் திருமாவளவன் ஆரம்பித்து வைத்தார். 

மங்கள விளக்கினை மாவீரர் இனியவனின் மகள் ஏற்றிவைக்க தொடக்க உரையினை பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் ஆற்றினார். 

தொடர்ந்து உரையினை அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் ஆற்றினார். 

அதனைத் தொடர்ந்து யாழ். பல்கலைக்கழக முன்னாள் தமிழ் துறை தலைவர் பேராசிரியர் சிவலிங்கராஜா உரையாற்றியதுடன் அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல் திருமாவளவன் சிறப்புரையாற்றினார். 

குறித்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன். முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கான எம் கே சிவாஜிலிங்கம் மற்றும் கஜதீபன் உட்பட அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அகழ்வு

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அகழ்வு

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

title