Header Logo
SLIC
உலகம்
விவசாய பொருட்கள் மீதான பரஸ்பர வரியை இரத்து செய்த டிரம்ப்!

Nov 16, 2025 - 01:58 PM

விவசாய பொருட்கள் மீதான பரஸ்பர வரியை இரத்து செய்த டிரம்ப்!
Mobitel Inner 1278
EDEX Inner

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் அத்தியாவசிய விவசாய பொருட்கள் மீதான பரஸ்பர வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரத்து செய்துள்ளார். 

அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் 2-வது முறை ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட டொனால்ட் டிரம்ப், பரஸ்பர வரி என்ற பெயரில், உலக நாடுகள் மீது அளவுக்கதிகமான வரிகளை விதித்து வருகிறார். 

இந்த வரி விதிப்பால் உலக நாடுகள் மட்டுமின்றி, அமெரிக்காவில் உள்ள மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அமெரிக்கர்கள் அதிகம் பயன்படுத்தும் மாட்டிறைச்சி, காபி, பழங்கள் போன்ற உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்தது. 

இதனால், மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதன் தாக்கம் சமீபத்தில் நடந்த நியூயோர்க் மேயர், நியூ ஜெர்சி மற்றும் விர்ஜினியா மாகாணங்களுக்கான ஆளுநர் தேர்தல்களில் எதிரொலித்தது. இந்தத் தேர்தல்களில் டிரம்பின் குடியரசு கட்சி படுதோல்வியை சந்தித்தது. 

இதையடுத்து, மாட்டிறைச்சி, அன்னாசி பழம், காபி, வாழைப்பழங்கள், தேநீர், பழச்சாறுகள், கொக்கோ, சில உரங்கள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் பொருட்கள் மீதான பரஸ்பர வரிகளை நீக்குவதாக டிரம்ப் அறிவித்தார். 

ஜனாதிபதி டிரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு அமெரிக்க உணவு தொழில்துறை சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. 

அமெரிக்க மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இந்த உத்தரவினால் குறையும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278