Header Logo

செய்திகள்
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

Nov 19, 2025 - 10:16 AM -

0

 பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

இன்றைய (19) பாராளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளன. 

இதற்கமைய, மு.ப. 09.00 முதல் மு.ப. 09.30 மணிவரையில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் இடம்பெறவுள்ளன. 

முற்பகல் 09.30 முதல் மு.ப. 10.00 மணிவரையான காலப்பகுதியில் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதேநேரம் மு.ப. 10.00 முதல் மு.ப. 10.30 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களுக்கான நேரம் வழங்கப்பட்டுள்ளது. 

மு.ப. 10.30 முதல் பி.ப. 6.00 மணிவரையில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2026 - குழு நிலை விவாதம் நடைபெறவுள்ளது. 

பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு ஆகியவற்றுக்கான 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதம் இன்று நடைபெறவுள்ளது. 

இதேவேளை பி.ப. 6.00 முதல் பி.ப. 6.30 சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

Comments
0

MOST READ

காணொளி
அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அகழ்வு

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அகழ்வு

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

title