Nov 19, 2025 - 11:45 AM -
0
பீஜிங்கில் உள்ள ஒரு அருங்காட்சியகம், அரைக்கப்பட்ட கரப்பான் பூச்சிகளைப் பானத்தின் மேற்பரப்பில் தூவி, ஒரு வினோதமான கோப்பியை (coffee) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பூச்சிக் coffee கரப்பான் பூச்சித் தூளுடன், உலர்ந்த மஞ்சள் நிற மாவுப் புழுக்களும் சேர்க்கப்படுகின்றன.
இந்தக் காபியைக் குடித்தவர்கள், இது "எரிந்த மற்றும் லேசான புளிப்பு" சுவை கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர் என்று 'த கவர்' என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கரப்பான் பூச்சி coffee,சீனாவின் தலைநகரில் உள்ள ஒரு பூச்சி அருங்காட்சியகத்தின் வர்த்தக நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கோப்பை coffee விலை 45 யுவான் (சுமார் US$6)ஆகும்.
எனினும் அந்த அறிக்கையில் அருங்காட்சியகத்தின் பெயர் தொடர்பான விபரங்கள் வௌியிடப்படவில்லை.
"நாங்கள் இந்த வகை காபியை ஜூன் மாத இறுதியில் அறிமுகப்படுத்தினோம்,
சமீபத்தில் இது இணையத்தில் பிரபலமானது என்று அருங்காட்சியகத்தின் ஊழியர் ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
பூச்சி கருப்பொருளைக் கொண்ட ஒரு அருங்காட்சியகம் என்பதால், அதற்குப் பொருத்தமான பானங்களை வைத்திருப்பது நல்ல யோசனையாகத் தோன்றியது, என்று அவர் மேலும் கூறினார்.
அவர்களது புதிய வரிசையில், பிட்சர் தாவரத்தின் செரிமானச் சாற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட பானங்களும், எறும்புகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட பானமும் விற்பனை செய்யப்படுகின்றன.
எறும்பு கோப்பி ஹாலோவீன் காலத்தில் மட்டுமே விற்கப்பட்டது என்று பெயரிடப்படாத அந்த ஊழியர் கூறினார்.
இந்த coffee அனைத்து பொருட்களும் பாரம்பரிய சீன மருத்துவ மூலிகைக் கடையில் இருந்து வாங்கப்பட்டதாகவும், எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் பானங்களின் பாதுகாப்பு குறித்து உறுதியாக இருக்கலாம் என்றும் கூறினார்.
பாரம்பரிய சீன மருத்துவக் கோட்பாடுகள், கரப்பான் பூச்சித் தூளை இரத்த ஓட்டத்திற்கு உதவும் மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று கூறுகின்றன.
புரதம் நிறைந்த மஞ்சள் மாவுப் புழுக்கள், மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் என்று மருத்துவர்கள் நம்புகின்றனர்.
எறும்பு கோப்பி புளிப்புச் சுவை கொண்டது என்றும், அதேசமயம் பிட்சர் தாவரப் பானம் சாதாரண கோப்பி போலவே சுவைக்கிறது என்றும் அந்த அருங்காட்சியக ஊழியர் கூறினார்.
கரப்பான் பூச்சி கோப்பியை பெரும்பாலும் ஆர்வமுள்ள இளைஞர்கள் தான் அருந்துகிறார்கள்.
குழந்தைகளுடன் வரும் பெற்றோர் கரப்பான் பூச்சிகளை விரும்புவதில்லை என்பதால் அவர்களுக்கு இது பிடிப்பதில்லை," என்று அவர் கூறினார்.
ஒரு நாளைக்கு 10 கோப்பைகளுக்கு மேல் கரப்பான் பூச்சி காபியை அந்தக் கடை விற்பனை செய்வதாக ஊழியர் தெரிவித்தார்.
பல இணையப் பயனர்கள் இந்த புதுமையான பானம் குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் வழக்கத்திற்கு மாறான கோப்பிகள் அசாதாரணமானதல்ல, அவை பெரும்பாலும் செய்திகளில் இடம்பிடிக்கின்றன.
இந்த ஆண்டு தொடக்கத்தில், தென்மேற்கு சீனாவில் உள்ள யுனான் மாகாணத்தில் உள்ள ஒரு coffee கடை, வறுத்த புழுக்களைக் கோப்பியுடன் கலந்து விற்பனை செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

