Header Logo
Vallibel FD
Selan Bank
ஏனையவை
புத்தளத்தில் 173,165 பேர் பாதிப்பு!

Dec 1, 2025 - 07:25 PM

புத்தளத்தில் 173,165 பேர் பாதிப்பு!
Mobitel Inner 1278

தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் நேற்று (30) மாலை வரையிலான கணக்கெடுப்பின் படி, 301 கிராம சேவகர் பிரிவில் 47,222 குடும்பங்களைச் சேர்ந்த 173,165 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் வை.ஐ.எம்.சில்வா தெரிவித்தார். 

புத்தளம் பிரதேச செயலகப் பிரிவிலேயே அதிக குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு 21 கிராம சேவகர் பிரிவுகளில் 13,004 குடும்பங்களைச் சேர்ந்த 47,939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும், மாதம்பை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 22 கிராம சேவகர் பிரிவுகளில் 464 குடும்பங்களைச் சேர்ந்த 1,690 பேரும், மஹாவெவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 30 கிராம சேவகர் பிரிவுகளில் 988 குடும்பங்களைச் சேர்ந்த 3,952 பேரும், ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 14 கிராம சேவகர் பிரிவுகளில் 8,923 குடும்பங்களைச் சேர்ந்த 31,200 பேரும், வென்னப்புவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 19 கிராம சேவகர் பிரிவுகளில் 272 குடும்பங்களைச் சேர்ந்த 916 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வன்னாத்தவில்லு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 8 கிராம சேவகர் பிரிவுகளில் 1,222 குடும்பங்களைச் சேர்ந்த 4,049 பேரும், சிலாபம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 28 கிராம சேவகர் பிரிவுகளில் 9,214 குடும்பங்களைச் சேர்ந்த 35,943 பேரும், கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 20 கிராம சேவகர் பிரிவுகளில் 3,052 குடும்பங்களைச் சேர்ந்த 10,994 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஆனமடுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 3 கிராம சேவகர் பிரிவுகளில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேரும் , நவகத்தேகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 8 கிராம சேவகர் பிரிவுகளில் 86 குடும்பங்களைச் சேர்ந்த 239 பேரும், தங்கொட்டுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 32 கிராம சேவகர் பிரிவுகளில் 1,337 குடும்பங்களைச் சேர்ந்த 4,150 பேரும், மஹாகும்புக்கடவல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 7 கிராம சேவகர் பிரிவுகளில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 102 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 17 கிராம சேவகர் பிரிவுகளில் 893 குடும்பங்களைச் சேர்ந்த 2,489 பேரும், முந்தல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 31 கிராம சேவகர் பிரிவுகளில் 7,268 குடும்பங்களைச் சேர்ந்த 27,834 பேரும், பல்லம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 4 கிராம சேவகர் பிரிவுகளில் 63 குடும்பங்களைச் சேர்ந்த 196 பேரும், நாத்தாண்டிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 37 கிராம சேவகர் பிரிவுகளில் 397 குடும்பங்களைச் சேர்ந்த 1,447 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட செயலாளர் வை.ஐ.எம்.சில்வா கூறினார். 

இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4 பேர் காணாமல் போயுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார். 

அத்துடன், 76 வீடுகள் வெள்ளத்தினால் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். 

புத்தளம், தங்கொடுவ, கருவலகஸ்வெவ மற்றும் முந்தல் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா ஒவ்வொருவர் வீதம் காணாமல் போயுள்ளனர். 

மேலும், ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளர் பிரிவில் ஐவரும், முந்தல் பிரதேச செயலாளர் பிரிவில் இருவரும், வென்னப்புவ, கருவலகஸ்வெவ, மற்றும் நாத்தாண்டிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா ஒவ்வொருவர் வீதமும் இந்த வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்துள்ளனர். 

மேலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக புத்தளம் மாவட்டத்தில் 75 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 4,104 குடும்பங்களைச் சேர்ந்த 14,328 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் சொன்னார். 

இவ்வாறு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தேவையான சமைத்த உணவு, குடிநீர் மற்றும் வைத்திய சேவைகள் என்பன அந்தந்த பிரதேச செயலாளர்களின் தலைமையில் முன்னெடுக்கப்படுவதாகவும் புத்தளம் மாவட்ட செயலாளர் மேலும் வை.ஐ.எம்.சில்வா தெரிவித்தார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

Mobitel 1278