Dec 2, 2025 - 12:14 PM
நுவரெலியா பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இடம்பெயர்ந்து இருந்த 21 வெளிநாட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று (01) பிற்பகல், விமானப்படையின் அநுராதபுரம் முகாமுக்கு உட்பட்ட 6 ம் இலக்க ஹெலிகொப்டர் படையணிக்கு சொந்தமான MI-17 ரக ஹெலிகொப்டர் மூலம் அவர்கள் மீட்கப்பட்டு, கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.





























