Header Logo
Vallibel FD
Selan Bank
வடக்கு
கடல் பகுதியில் விபத்தில் சிக்கிய இரண்டு மீனவர்கள் மீட்பு!

Sep 22, 2026 - 09:16 AM

கடல் பகுதியில் விபத்தில் சிக்கிய இரண்டு மீனவர்கள் மீட்பு!
Mobitel Inner 1278

தலைமன்னார் வடக்கு கடல் பகுதியில் விபத்தில் சிக்கிய மீன்பிடிப் படகில் இருந்த இரண்டு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 

கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில், கடற்படையினரால் நேற்று (21) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போதே இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். 

யாழ்ப்பாணம், குருநகர் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 19 ஆம் திகதி இரண்டு மீனவர்களுடன் புறப்பட்ட ஒரு நாள் மீன்பிடிப் படகு மீண்டும் மீன்பிடி துறைமுகத்திற்கு திரும்பவில்லை என்றும், அந்தப் படகை கண்டுபிடிப்பதற்கு கடற்படையின் உதவியை வழங்குமாறும், மீன்பிடி மற்றும் நீர் வளங்கள் திணைக்களத்தினால் கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிக்கப்பட்டது. 

அந்த அறிவித்தலுக்கு உடனடியாக பதிலளித்த கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், அந்த கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் படகுகளுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியதுடன், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக வடக்கு மற்றும் வடமத்திய கடற்படை தளபத்தியங்களுக்கும் அறியத்தந்தது. 

அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம், தலைமன்னாருக்கு வடக்கு கடல் பகுதியில் எரிபொருள் இன்றி செயலிழந்து மிதந்து கொண்டிருந்த ஒரு நாள் மீன்பிடிப் படகு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதில் இருந்த இரண்டு மீனவர்கள் இவ்வாறு பாதுகாப்பாக மீட்கப்பட்துன், மேலும் அந்த மீனவர்களும் ஒரு நாள் மீன்பிடிப் படகும் தலைமன்னாருக்கு கொண்டுவரப்பட்டதுடன், அங்கு மீனவர்களுக்கு தேவையான மனிதநேய உதவிகள் வழங்கப்பட்டன. 

மேலும், கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில், இலங்கைக்குச் சொந்தமான கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் ஆபத்தில் சிக்கி தவிக்கும் கடற்படை மற்றும் மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்காக, தயார் நிலையில் உள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

Mobitel 1278