Dec 2, 2025 - 05:54 PM -
0
சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03) முதல் மீண்டும் திறப்பதற்குச் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அண்மையில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக இந்த வைத்தியசாலையின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
நேற்று (01) வைத்தியசாலைக்கு மின்சார விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டதுடன், இன்று (02) நீர் விநியோகமும் மீண்டும் வழங்கப்பட்டதாக சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் தினேதி கொக்கலகே தெரிவித்தார்.
அத்துடன், அந்த வைத்தியசாலையில் சேதமடைந்த ஏனைய அனைத்துப் பிரிவுகளும் பொதுமக்களின் சேவைக்காகப் படிப்படியாக வழமைக்குத் திரும்பும் வகையில் விரைவாகச் சீர்செய்யப்படும் என்றும் சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

