Dec 2, 2025 - 09:38 PM -
0
இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் 4 கிலோ கிராமிற்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருள் தொகை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குக் கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில், இன்று (02) பேருவளை, கலங்கரை விளக்கத் தீவில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, புதர் காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 260 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட 'ஐஸ்' போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 68 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காகக் கொழும்பு போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

