Header Logo

செய்திகள்
கண்டி - கொழும்பு வீதி பஹல கடுகன்னாவையில் மீண்டும் பூட்டு

Dec 4, 2025 - 08:22 PM -

0

கண்டி - கொழும்பு வீதி பஹல கடுகன்னாவையில் மீண்டும் பூட்டு

கண்டி - கொழும்பு வீதி பஹல கடுகன்னாவ பகுதியில் மீண்டும் மூடப்பட்டுள்ளது. 

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவிப்புக்கு அமைய இன்று பிற்பகல் முதல் அவ்வீதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் ஜே.எம்.ஹேரத் தெரிவித்தார். 

அண்மையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அவ்வீதி பல சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில், நேற்று பிற்பகல் முதல் அது மீண்டும் போக்குவரத்திற்காக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. 

எவ்வாறாயினும், அனர்த்த நிலைமை காரணமாக தடைப்பட்ட அனைத்து வீதிகளையும் அடுத்த நான்கு நாட்களுக்குள் சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி தெரிவித்தார். 

இதனிடையே, மலையக ரயில் மார்க்கத்தில் சேதமடைந்த பேராதனை பாலத்தை சீரமைப்பது தொடர்பில் ஆய்வொன்று மேற்கொள்ளப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரிய குறிப்பிட்டார். 

எனினும், மலையக ரயில் மார்க்கத்தில் சேதமடைந்த பேராதனை பாலம் தொடர்பில் ஆழமான ஆய்வொன்றின் பின்னரே அதனை சீரமைப்பது குறித்த ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரமுடியும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் குஷான் விஜேசூரிய தெரிவித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அகழ்வு

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அகழ்வு

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

title