Header Logo

செய்திகள்
சீரற்ற வானிலையால் பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Dec 4, 2025 - 10:28 PM -

0

சீரற்ற வானிலையால் பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 486 ஆக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (03) இரவு 07.00 மணிக்கு வெளியிட்டுள்ளது. 

குறித்த அறிக்கையின் புள்ளிவிபரங்களின்படி, அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 486 ஆக அதிகரித்துள்ளதுடன், 341 பேர் காணாமல் போயுள்ளனர். 

இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, 25 மாவட்டங்களிலும் 519,842 குடும்பங்களைச் சேர்ந்த 1,844,055 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இடம்பெயர்ந்த மக்களுக்காக நாடளாவிய ரீதியில் 1,231 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இம்முகாம்களில் 51,023 குடும்பங்களைச் சேர்ந்த 171,778 பேர் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

சொத்து சேதங்களைப் பொறுத்தவரையில், 2,303 வீடுகள் முழுமையாகவும், 52,489 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அகழ்வு

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அகழ்வு

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

title