Header Logo
SLIC
கிழக்கு
தொல்பொருள் திணைக்கள பதாதை அகற்றப்பட்டமை தொடர்பிலான வழக்கு ஒத்திவைப்பு!

Dec 16, 2025 - 10:06 AM

தொல்பொருள் திணைக்கள பதாதை அகற்றப்பட்டமை தொடர்பிலான வழக்கு ஒத்திவைப்பு!
Mobitel Inner 1278
EDEX Inner


வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்ட குழுவினரால் தொல்பொருள் திணைக்கள பதாதை அகற்றப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

தொல்பொருள் இடங்கள் என அடையாளப்படுத்தும் விதமாக தொல்பொருள் திணிக்களத்தினால் நிறுவப்பட்ட வழிகாட்டிப் பதாதைகளை கடந்த நவம்பர் 23 ஆம் திகதி வாழைச்சேனை பிரதேசசபைத் தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் அகற்றியமை தொடர்பில் தவிசாளர் உள்ளிட்ட ஐவர் மீது தொல்பொருள் திணைக்களத்தின் முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரால் கடந்த நவம்பர் 25 ஆம் திகதி வாழைச்சேனை நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கில் உரிய பிரதிவாதிகளுக்குப் பிணை வழங்கப்பட்டு நேற்று (15) குறித்த வழக்கு மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது பொலிஸாரால் மேலதிக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது. 

சட்டத்தரணிகளான விஜயகுமார் மற்றும் ஹபீப் றிபான் ஆகியோர் பிரதிவாதிகள் சார்பில் நேற்று ஆஜாராகியிருந்தனர். 

இது தொடர்பில் சட்டத்தரணி ஹபீப் றிபான் தெரிவிக்கையில், 

குறித்த வழக்கு விசாரணைகள் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டன. பொலிஸாரினால் வழக்கு தொடர்பான மேலதிக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது குறித்த பதாதை நடப்படுவது தொடர்பில் வினவப்பட்டது. இதன் போது குறித்த தொல்லியல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட கடிதங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து மீள கடிதமொன்று வழங்குமாறும், அக்கடிதத்தை சபையில் சமர்ப்பித்து சபையினால் மேற்கொள்ளப்படும் தீர்மானத்தைத் தொடர்ந்து மன்றுக்கு அறிவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து வழக்கு விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278