Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
ஹேலீஸ் குழுமத்தின் துணை நிறுவனமான டிப்ட் புரொடக்ட்ஸ் பிஎல்சி வெள்ள நிவாரணப் பணிகளுக்காக பாதுகாப்பு அமைச்சிடம் 50,000 கையுறைகளை நன்கொடையாக வழங்கியது

Dec 16, 2025 - 11:21 AM

ஹேலீஸ் குழுமத்தின் துணை நிறுவனமான டிப்ட் புரொடக்ட்ஸ் பிஎல்சி வெள்ள நிவாரணப் பணிகளுக்காக பாதுகாப்பு அமைச்சிடம் 50,000 கையுறைகளை நன்கொடையாக வழங்கியது
Mobitel Inner 1278

இலங்கையின் முன்னணி கையுறை பாதுகாப்பு தீர்வுகள் உற்பத்தியாளர்களில் ஒன்றான டிப்ட் புரொடக்ட்ஸ் பிஎல்சி (DPL), அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50,000 பாதுகாப்பு கையுறைகளை பாதுகாப்பு அமைச்சிடம் நன்கொடையாக வழங்கியுள்ளது. 

இந்த நன்கொடையை , தேசிய அனர்த்த முயற்சிகளுக்கு தனியார் துறையின் அர்ப்பணிப்பை வலியுறுத்தும் விதமாக, ஹேலீஸ் பிஎல்சி நிறுவனத்தின் தலைவர் மோகன் பண்டிதகே மற்றும் டிப்ட் புரொடக்ட்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் புஷ்பிகா ஜனதீர ஆகியோர் இணைந்து, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர். 

இந்தக் கையுறைகள் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, துப்புரவு மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிவாரண பணியாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கு விநியோகிக்கப்படும். இது நிவாரண நடவடிக்கைகளின் போது பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் தொடர் செயற்பாடுகளை உறுதிப்படுத்த உதவும். இந்த முயற்சி குறித்து கருத்துத் தெரிவித்த DPL இன் பிரதிநிதிகள், இந்நன்கொடையானது சமூகப் பொறுப்புணர்வு மீதான நிறுவனத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும், தேசியத் தேவையின் போது சமூகங்களுடன் துணைநிற்க வேண்டிய அதன் பொறுப்பையும் பிரதிபலிக்கிறது என எடுத்துரைத்தனர். உலகளாவிய சந்தைகளுக்குப் பாதுகாப்பு கையுறைகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்ற ரீதியில், அனர்த்த மீட்புப் பணியில் முக்கிய பங்காற்றும் முன்னணிப் பணியாளர்கள் மற்றும் தொண்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை DPL வலியுறுத்தியது. 

இந்த முன்முயற்சியானது, டிப்ட் புரொடக்ட்ஸ் பிஎல்சி மற்றும் ஹேலீஸ் குழுமம் ஆகிய இரண்டின் பரந்த நிலைபேண்தன்மை மற்றும் சமூக ஈடுபாடு சார்ந்த அர்ப்பணிப்புகளுடன் ஒத்துப்போவதோடு சமூக நலனுக்கு ஆதரவளிக்கும் DPL இன் பங்களிப்புகள் மீதான கவனத்தை வலுப்படுத்துகிறது. 

தான் பெறுவதை சமூகத்திற்கு மீளவும் கொடுக்கும் அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, டிப்ட் புரொடக்ட்ஸ் பிஎல்சி நிவாரணம் மற்றும் சமூக முன்முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.

MOST READ
06
ஆங்கில தினம் இறுதிப் போட்டிகள் 2026 இல் ஜோன் கீல்ஸ் புலமைப்பரிசில் பெற்றவர்கள் சிறந்த மொழி மற்றும் இயன்கலை திறன்களை வெளிப்படுத்தியிருந்தனர்

ஆங்கில தினம் இறுதிப் போட்டிகள் 2026 இல் ஜோன் கீல்ஸ் புலமைப்பரிசில் பெற்றவர்கள் சிறந்த மொழி மற்றும் இயன்கலை திறன்களை வெளிப்படுத்தியிருந்தனர்

Sep 23, 2026 - 01:57 PM

காணொளி
அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

Mobitel 1278