Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
ஆங்கில தினம் இறுதிப் போட்டிகள் 2026 இல் ஜோன் கீல்ஸ் புலமைப்பரிசில் பெற்றவர்கள் சிறந்த மொழி மற்றும் இயன்கலை திறன்களை வெளிப்படுத்தியிருந்தனர்

Sep 23, 2026 - 01:57 PM

ஆங்கில தினம் இறுதிப் போட்டிகள் 2026 இல் ஜோன் கீல்ஸ் புலமைப்பரிசில் பெற்றவர்கள் சிறந்த மொழி மற்றும் இயன்கலை திறன்களை வெளிப்படுத்தியிருந்தனர்
Mobitel Inner 1278

ஜோன் கீல்ஸ் ஆங்கில தின இறுதிப் போட்டி 2026 இல் “English for Teens” அடுக்கு 1 புலமைப்பரிசில் மாணவர்கள் நாடகங்கள் மற்றும் விளக்கக்காட்சிகள் மூலமாகத் தங்களது ஆங்கில மொழிப் புலமை, படைப்பாற்றல் மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தி பார்வையாளர்களையும் நடுவர்களையும் வியப்பில் ஆழ்த்தினர். ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையினால் (JKF) ஜோன் கீல்ஸ் ஆங்கில மொழிப் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் செப்டெம்பர் 03 ஆம் திகதி கொழும்பிலுள்ள பிஷப் கல்லூரி கேட்போர்கூடத்தில் இம்மாநாடு நடத்தப்பட்டது. ஏழு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 13 மாவட்டங்களில் அடுக்கு 1 ஐப் பூர்த்தி செய்த 742 மாணவர்களில் 678 பேரை உள்ளடக்கி நடத்தப்பட்ட பூர்வாங்க சுற்றுப் போட்டிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஆறு மாகாணங்களைச் சேர்ந்த 76 மாணவர்களைக் கொண்ட எட்டு அணிகள் இதில் பங்கேற்றன. 

இந்நிகழ்வில் கொழும்பு மாநகர முதல்வர் மதிப்பிற்குரிய திருமதி விராய் காலி பல்தசார் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர் கிரிஷான் பாலேந்திரா, பிரதித் தலைவர் கிஹான் குரே, CSR குழுமத்தின் தலைமை அதிகாரி காமெலின் ஜயசூரிய மற்றும் Gateway Group தவிசாளர் கலாநிதி ஹர்ஷ அலஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர். மாணவர்களை ஊக்கப்படுத்தவும் அவர்களின் சாதனைகளைக் கொண்டாடவும் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ மற்றும் வணிகத் தலைவர்களுடன் JKF இன் பங்காளர்கள் மற்றும் பங்குதாரர்களின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

ஒன்றுகூடியிருந்தவர்கள் மத்தியில் கொழும்பு மேயர் பல்தசார் கருத்துத் தெரிவிக்கையில், “ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்து வரும் பணிகள் சிறந்த முறையில் பரிசோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டவை ஆகும். மாணவர்கள் மொழித்திறனை வளர்த்துக்கொள்வது மட்டுமன்றி, ஆக்கப்பூர்வமாகச் சிந்தியுங்கள் என்பதைக் காண்பதும் ஊக்கமளிப்பதாக உள்ளது. ஆக்கப்பூர்வமாகச் சிந்திக்கும் திறன், தன்னம்பிக்கையுடன் தொடர்புகொள்ளும் திறன் மற்றும் ஒரு மேடையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திறன் ஆகியவை வாழ்க்கைப் பயணத்திற்கு உதவும் முக்கியமான திறன்களாகும். ஒரு நகரமாக, ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் பங்களிப்பிற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இத்தகைய திட்டங்களில் மட்டுமன்றி, கலா பொல போன்ற முன்முயற்சிகளிலும் இந்த அர்ப்பணிப்பு பிரதிபலிப்பதை நாம் காண்கிறோம். ஜோன் கீல்ஸ் ஏற்படுத்திய நேர்மறையான தாக்கத்தை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். நகரங்களையும் சமூகங்களையும் மாற்றுவதைப் பற்றிக் கவனம் செலுத்துகையில், அதை எந்தவொரு தனி நிறுவனத்தாலும் மட்டும் செய்துவிட முடியாது. பங்குதாரர்கள் அனைவரும் ஒன்றிணைகையில் உண்மையான மற்றும் நிலையான மாற்றம் ஏற்படுகிறது.” என்றார். 

CSR குழுமத்தின் தலைமை அதிகாரி காமெலின் ஜயசூரிய கருத்துத் தெரிவிக்கையில், “ஜோன் கீல்ஸைப் பொறுத்தவரை, சமூகப் பொறுப்புணர்வு என்பது முக்கியமாக எங்களது மக்கள் மீதான முதலீடாகும் — சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் உயர் கல்வி மற்றும் தொழில்களைத் தொடர அவர்களுக்குப் பொருத்தமான கல்வி மற்றும் திறன்களை வழங்குதல், எங்களது சமூகங்கள் மேலும் உற்பத்தித்திறன் கொண்டதாகவும், தன்னிறைவு பெற்றதாகவும், மீள்தன்மை கொண்டதாகவும் மாற அவர்களுக்கு அறிவையும் வளங்களையும் அளித்தல், மற்றும் எங்களது தேசத்தை உள்ளடக்கியதாகவும் வலிமையானதாகவும் மாற்ற அதிகாரம் அளித்தல் ஆகியவை இதன் நோக்கமாகும். எங்களது கல்வி சார்ந்த அக்கறையின் மூலம், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, வகுப்பறைக்கு அப்பாலும் உதவும் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கும், கல்வியறிவுக்கும் நிலையான தொழில்களுக்குமான இடைவெளியைக் குறைப்பதற்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதற்காகப் பாடுபடுகிறோம். இன்று காட்சிப்படுத்தப்பட்ட சாதனைகள், மாணவர்களின் கடின உழைப்பு, அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஊக்குவிப்பு, மற்றும் இளைஞர்களுக்கு சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பளிக்கப்படும்போது வெளிப்படும் அளப்பரிய ஆற்றல் ஆகியவற்றிற்கு ஒரு சான்றாகும்.” என்றார். 

இந்தத் திட்டத்தினூடாக தாம் பெற்றுக் கொண்ட அனுபவத்தை அடுக்கு 2 பேச்சுப் போட்டியின் வெற்றியாளர் லிஸ்விதா முனீஸ்வரன் பகிர்ந்து கொள்ளும் போது, “இன்று இங்குள்ள போது, மாணவர்களால் நிறைந்த ஒரு மண்டபத்தை மட்டும் நான் பார்க்கவில்லை. தங்களின் இயல்பான எல்லைகளைத் தாண்டி வந்து பிரகாசிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ள எதிர்காலத் தலைவர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் கதைகூறுபவர்களை நான் காண்கிறேன். இளைஞர்களுக்கு இதுபோன்று ஆதரவளிக்கப்படும்போது, அது நாங்கள் பேசும் முறையை மட்டும் மாற்றுவதில்லை; இவ்வுலகில் எமக்கான இடத்தை நாங்கள் பார்க்கும் விதத்தையும், வரும் ஆண்டுகளில் நாங்கள் எட்டத் துணியும் இலக்குகளாக உருவெடுப்பதையும் மாற்றி அமைக்கிறது.” என்றார். 

அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாட்டின் அபாயம் என்ற தலைப்பிலான சக்திவாய்ந்த தகவலுக்காக கொழும்புக் கிளையைச் சேர்ந்த மரியம் மகளிர் கல்லூரி சிறந்த விளக்கக்காட்சிக்கான (Best Presentation) விருதை வென்றது. அத்துடன், பீட்டரும் ஓநாயும் (Peter and the Wolf) நாடகத்தின் கற்பனைத்திறன்மிக்க படைப்பிற்காக தம்புத்தேகம கிளையைச் சேர்ந்த இஹள புல்நெவ மகா வித்தியாலயம் சிறந்த நாடகத்திற்கான (Best Drama) விருதைத் தட்டிச் சென்றது. த சீக்ரெட் ரூம் (The Secret Room) நாடகத்தில் மன்னராகத் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மட்டக்களப்பு கிளையைச் சேர்ந்த தவநாயகம் கரிசனன் சிறந்த நடிகருக்கான (Best Performer) விருதைப் பெற்றார். 

பின்தங்கிய பின்னணியைக் கொண்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உயர்கல்வி மற்றும் நிலையான வேலைவாய்ப்புக்கான வழிகளை மேம்படுத்தும் நோக்கில், அவர்களின் ஆங்கில மொழித் திறன், அத்தியாவசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென் திறன்களை (soft skills) மேம்படுத்துவதற்கான சமமான வாய்ப்புகளை வழங்கும் நோக்கோடு 2004 ஆம் ஆண்டில் “ஜோன் கீல்ஸ் ஆங்கில மொழிப் புலமைப்பரிசில் திட்டம்” (JKELSP) ஆரம்பிக்கப்பட்டது. ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் நீண்டகால மற்றும் பிரதானமான இச்சமூகப் பொறுப்புணர்வு முன்முயற்சியானது, “நாளைக்காக நாட்டை வலுப்படுத்துதல்” (Empowering the Nation for Tomorrow) என்ற அதன் தொலைநோக்கு பார்வைக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த 21 ஆண்டுகளில், பாடசாலைக் கலைத்திட்டத்திற்கு மேலதிகமாகவும், உரிய வயதுப் பிரிவினரின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட பல்வேறு பாடநெறிகள் மூலமாகவும் 23,700 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இத்திட்டத்தினால் பயனடைந்துள்ளனர். English for Teens புலமைப்பரிசில் மாணவர்களின் திறமைகள் மற்றும் ஆற்றல்களை வெளிப்படுத்திக் கொண்டாடுவதற்கும், அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கும், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையிலான தொடர்பாடலை ஊக்குவிப்பதற்குமாக “ஜோன் கீல்ஸ் ஆங்கிலத் தினம்” ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றது. 

கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில், சந்தை மூலதனமாக்கலின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ள மிகப்பெரிய பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமும், 7 பல்வேறு தொழில்துறைத் துறைகளில் 80 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயக்கி வருவதுமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (JKH) நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுப் பிரிவான ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையானது கல்வி, சமூகம் மற்றும் வாழ்வாதாரம், சமூக ஆரோக்கியம் மற்றும் ஒத்திசைவு, மற்றும் உயிரியல் பரம்பல் ஆகிய நான்கு முக்கிய துறைகளை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம், 18,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளதுடன், LMD சஞ்சிகையினால் கடந்த 21 ஆண்டுகளாக இலங்கையின் மிகவும் மதிக்கத்தக்க நிறுவனம் (Most Respected Entity) என்றும் தரப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும், LMD வாசகர்களின் தெரிவு விருதில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இலங்கையின் “மிகவும் விரும்பப்படும் கூட்டாண்மை வர்த்தக நாமம்” (Most Loved Corporate Brand) ஆகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் (WEF) முழுமையான உறுப்பினராகவும், ஐக்கிய நாடுகளின் உலகளாவிய ஒப்பந்தத்தின் (UN Global Compact) பங்காளியாகவும் விளங்கும் JKH, “நாளைக்காக நாட்டை வலுப்படுத்துதல்” (Empowering the Nation for Tomorrow) என்ற தனது சமூகப் பொறுப்புணர்வுத் தொலைநோக்குப் பார்வையை ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மூலமாகவும், இலங்கையில் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கணிசமாகக் குறைப்பதில் ஊக்கியாகச் செயல்படும் “Plasticcycle” எனும் சமூக தொழில்முனைவு முன்முயற்சி மூலமாகவும் முன்னெடுக்கின்றது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ
06
ஆங்கில தினம் இறுதிப் போட்டிகள் 2026 இல் ஜோன் கீல்ஸ் புலமைப்பரிசில் பெற்றவர்கள் சிறந்த மொழி மற்றும் இயன்கலை திறன்களை வெளிப்படுத்தியிருந்தனர்

ஆங்கில தினம் இறுதிப் போட்டிகள் 2026 இல் ஜோன் கீல்ஸ் புலமைப்பரிசில் பெற்றவர்கள் சிறந்த மொழி மற்றும் இயன்கலை திறன்களை வெளிப்படுத்தியிருந்தனர்

Sep 23, 2026 - 01:57 PM


காணொளி
அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

Mobitel 1278