Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
உலகில் முதல் முறையாக ரோமிங் (Roaming) திட்டங்களுடன் பிரயாணக் காப்புறுதியை இலவசமாக வழங்கும் நிறுவனமாக மாறி ஹட்ச் சாதனை படைத்துள்ளது

Dec 16, 2025 - 11:29 AM

உலகில் முதல் முறையாக ரோமிங் (Roaming) திட்டங்களுடன் பிரயாணக் காப்புறுதியை இலவசமாக வழங்கும் நிறுவனமாக மாறி ஹட்ச் சாதனை படைத்துள்ளது
Mobitel Inner 1278

தனது ரோமிங் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பிரயாணக் காப்புறுதியை இலவசமாக வழங்குவதை அறிமுகப்படுத்தியுள்ள ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனம், பிரயாணிகளின் நலனை அடுத்த மட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. சௌகரியமான ரோமிங் சேவை மற்றும் விரிவான பிரயாணக் காப்புறுதி ஆகியவற்றின் தனித்துவமான இணைப்புடன், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முயற்சியாக இது மாறியுள்ளது. 

150 க்கும் மேற்பட்ட நாடுகளில் ரோமிங் சேவையை வழங்கி வருகின்ற ஹட்ச் நிறுவனம், சந்தையில் கிடைக்கும் ஏனைய தெரிவுகளுடன் ஒப்பிடுகையில் 50% வரை குறைந்த கட்டணங்களுடன் ஒப்பற்ற மதிப்பை ஏற்கனவே தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது. அதற்கு மேலும் பயனளிக்கும் வண்ணம் இந்த பிரயாணக் காப்புறுதியின் அறிமுகம் அமையப்பெற்றுள்ளதுடன், பிரயாணம் செய்யும் வேளைகளில் பிரயாணப் பொதியை தவற விடல், வைத்தியசாலை செலவினங்கள், விபத்துக்கள், சுகவீனம், தனிப்பட்ட பொறுப்பு மற்றும் பிரயாணங்களில் ஏற்படும் தாமதங்கள் போன்ற பல்வேறுபட்ட நிகழ்வுகளை இக்காப்புறுதி உள்ளடக்கியுள்ளது. டேவிட் பீரிஸ் குழுமத்தின் காப்புறுதிப் பிரிவும், இலங்கையில் 2 வது ஸ்தானத்திலுள்ள காப்புறுதி தரகு சேவை நிறுவனமுமான Assetline Insurance Brokers (Private) Limited (AIBL) மற்றும் அலியான்ஸ் இன்சூரன்ஸ் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இக்காப்புறுதி வழங்கப்படுவதுடன், வாடிக்கையாளர்கள் பிரயாணம் செய்கின்ற வேளைகளில் தமது உற்ற துணையாக ஹட்ச் நிறுவனத்தை நம்பிக்கையுடன் தெரிவு செய்வதை இது உறுதிப்படுத்துகின்றது. 

மக்கள் தற்போது நெகிழ்திறன் கொண்ட பிரயாணத் தேவைகளை நாடுகின்ற நிலையில், அவர்கள் பிரயாணம் செய்கின்ற காலத்தைப் பொறுத்து பல்வகைப்பட்ட ரோமிங் திட்டங்களை ஹட்ச் அவர்களுக்கு வழங்கி வருகின்றது. அவற்றுள்ள மிகவும் பிரபலமான 10GB வாராந்த திட்டமானது தற்போது 5,000 அமெரிக்க டொலர் மதிப்புடனான இலவச பிரயாணக் காப்புறுதியையும் உள்ளக்கியுள்ளதுடன், பிரயாணிகளுக்கு ஒப்பற்ற மதிப்பையும், மன நிம்மதியையும் வழங்குகின்றது. HUTCH Self-Care App மூலமாக இத்திட்டங்களை தங்குதடையின்றி செயல்படுத்தி, கண்காணித்துக் கொள்ள முடியும் என்பதால் வாடிக்கையாளர்கள் தாம் பிரயாணம் செய்கின்ற வேளைகளில் இதனை முழுமையாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். வலையமைப்பில் புதிதாக இணைந்து கொள்கின்ற வாடிக்கையாளர்களும் www.hutch.lk என்ற தளத்தினூடாக SIM அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும். உடனடியாகவே eSIM ஒன்றை அவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் அல்லது SIM அட்டையை தாம் இருக்கின்ற இடத்திற்கே தருவித்துக் கொள்ள முடியும். அத்துடன் நாடளாவியரீதியிலுள்ள அங்கீகாரம் பெற்ற முகவர்களிடமும் இணைப்புக்கள் கிடைக்கப்பெறுகின்றன. 

இத்தகைய அளவில் ஒப்பற்ற ரோமிங் திட்டங்களை வழங்குவதற்கு அதன் தாய் நிறுவனமான CK Hutchison Holdings ன் பலம் ஹட்ச் நிறுவனத்திற்கு சிறப்பாகக் கைகொடுக்கின்றது. ஐரோப்பா மற்றும் ஆசியா ஆகிய பிராந்தியங்களில் ஆழமாக வேரூன்றியுள்ள தொலைதொடர்பாடல் சேவைகளுடன் Fortune 500 பட்டியலில் இடம்பெற்றுள்ள கூட்டு நிறுவனங்கள் குழுமமாகத் திகழ்ந்து வரும் CKHH ஆனது விரிவான சர்வதேச காற்தடத்தின் பலத்தைக் கொண்டுள்ளது. வெளிநாடுகளுக்கு பிரயாணம் செய்கின்ற இலங்கை மக்களுக்கு வேறு எந்த சேவை வழங்குனராலும் வழங்க முடியாத அளவுக்கு மிகச் சிறந்த ரோமிங் கட்டணங்கள் மற்றும் பிரத்தியேக சலுகைகளை ஹட்ச் வழங்குவதற்கு அந்தப் பலம் இடமளிக்கின்றது. 

ஹட்ச் நிறுவனத்தின் சர்வதேச வணிகத்திற்கான தலைமை அதிகாரி முஷ்தாக் மன்சூர்தீன் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்: “இந்த புரட்சிகரமான முயற்சியின் மூலமாக எமது வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் பிரயாண அனுபவத்தை ஹட்ச் முற்றிலும் மாற்றியமைத்துள்ளது. அவர்கள் வெளிநாடுகளுக்கு பிரயாணிக்கின்ற சமயங்களில் சிக்கனமான கட்டணங்களுடன் தொடர்பாடல்களைப் பேணுவதற்கு உதவுவது மாத்திரமன்றி, இலங்கையில் இதற்கு முன்னர் எந்தவொரு தொலைதொடர்பாடல் சேவை வழங்குனர்களாலும் வழங்கப்பட்டிராத ஒன்றாக, அவர்கள் பிரயாணிக்கும் போது காப்புறுதியையும் நாம் அவர்களுக்கு வழங்குகின்றோம். உலகளாவில் வியாபித்துள்ள CKHH ன் வலையமைப்பின் பலம் மற்றும் கூட்டாண்மைகள் ஆகியவற்றின் பக்கபலத்துடன், உலகத்தரம் வாய்ந்த புத்தாக்கம் மற்றும் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் மதிப்பு ஆகியவற்றை நாம் தொடர்ந்தும் வழங்கி வருகின்றோம்.” 

சிக்கனமான கட்டணங்கள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கிடையில் இணைப்புப் பாலத்தை ஏற்படுத்தி, சர்வதேச அளவு மற்றும் உள்நாட்டு அக்கறை ஆகியவற்றை வழங்கும் ஹட்ச், இலங்கையின் தொலைதொடர்பாடல்கள் துறையில் புதிய தர ஒப்பீட்டு நியமமொன்றை நிலைநாட்டியுள்ளதுடன், வாடிக்கையாளர்கள் பிரயாணம் செய்யும் நேரங்களில் அவர்களுக்கு தொடர்பாடல் மற்றும் காப்பீடு ஆகிய இரண்டையும் உறுதிப்படுத்துவது மாத்திரமன்றி, உலகின் மிகவும் வலிமைமிக்க தொலைதொடர்பாடல் குழுமங்களில் ஒன்றின் சர்வதேச பலத்தின் அனுகூலத்தையும் அவர்களுக்கு வழங்குகின்றது. 

ஹட்ச் ஸ்ரீலங்கா தொடர்பான விபரங்கள் 

ஹொங்கொங் நாட்டைத் தளமாகக் கொண்ட Fortune 500 நிறுவனங்கள் குழுமமான CK Hutchison Holdings (CKHH) இன் துணை நிறுவனமான ஹட்ச் ஸ்ரீலங்கா, இலங்கையில் தொலைதொடர்பாடல் துறையில் முக்கியமான செயல்பாட்டாளராக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் காணப்படுவதுடன், தொலைதொடர்பாடல் உள்ளடங்கலாக ஆறு பாரிய துறைகளில் செயல்பட்டுவருவதுடன், 2023 ம் ஆண்டில் சுமார் 60 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை CKHH பதிவாக்கியுள்ளது. 

1997 ம் ஆண்டில் இலங்கை சந்தையில் காலடியெடுத்து வைத்த ஹட்ச், 2004 ம் ஆண்டில் GSM சேவையின் அறிமுகத்தைத் தொடர்ந்து, 2011 இல் 3G மற்றும் 2018 இல் 4G என தனது சேவைகளை படிப்படியாக விஸ்தரித்தது. 2019 இல் எடிசலாட் ஸ்ரீலங்கா (Etisalat Sri Lanka) நிறுவனத்தை கொள்முதல் செய்தமை ஹட்ச்சின் சந்தை ஸ்தானத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதுடன், 078 மற்றும் 072 என ஆரம்பிக்கும் தொலைபேசி இணைப்பு இலக்கங்களுக்கு சிக்கனமான கட்டணங்களுடன், நம்பகமான சேவைகளை வழங்குவதற்கு இடமளித்துள்ளது. ஹட்ச்சின் 4G வலையமைப்பு இலங்கை சனத்தொகையில் 95% ஐ உள்ளடக்கியுள்ளதுடன், தேசத்தின் டிஜிட்டல் அபிலாஷைகளை அடைவதற்கு உதவும் வகையில் 5G சேவைகளை முன்னெடுப்பதற்கு இந்நிறுவனம் தயாராக உள்ளது. 

சிக்கனமான கட்டணங்களுடன், நாட்டில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்கள் கூட தொடர்பாடல், வணிக செயல்திறன் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை மேம்படுத்துகின்ற வாய்ப்பைப் பெறும் வகையில் நம்பகமான இணைப்புத்திறனை வழங்கி, தனது சேவைகளை ஹட்ச் விரிவுபடுத்தி வருகின்றது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ
06
ஆங்கில தினம் இறுதிப் போட்டிகள் 2026 இல் ஜோன் கீல்ஸ் புலமைப்பரிசில் பெற்றவர்கள் சிறந்த மொழி மற்றும் இயன்கலை திறன்களை வெளிப்படுத்தியிருந்தனர்

ஆங்கில தினம் இறுதிப் போட்டிகள் 2026 இல் ஜோன் கீல்ஸ் புலமைப்பரிசில் பெற்றவர்கள் சிறந்த மொழி மற்றும் இயன்கலை திறன்களை வெளிப்படுத்தியிருந்தனர்

Sep 23, 2026 - 01:57 PM


காணொளி
அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

Mobitel 1278