Header Logo
Mogo Academy

கிழக்கு
படித்த துறவினை மிக கேவலமான முறையில் பொலிஸார் நடாத்தியுள்ளனர்!

Dec 22, 2025 - 01:16 PM -

0

படித்த துறவினை மிக கேவலமான முறையில் பொலிஸார் நடாத்தியுள்ளனர்!
Mobitel inner

தையிட்டியில் நடைபெற்ற சம்பவமானது மிகவும் மூர்க்கத்தனமானதும் கண்டிக்கத்தக்கது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். 

பிக்குகள் எவ்வளவு அட்டகாசம் செய்தாலும் அவர்களுடன் கன்னியமாக நடந்துகொள்ளும் பொலிஸார் இந்து மதகுருவினை நடாத்திய விதம் கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார். 

நேற்று (21) மாலை மட்டக்களப்பு செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முற்போக்கான சில விடயங்களை பாராட்டிக்கொண்டிருக்கும்போது பிற்போக்கான, மூர்க்கத்தனமான, கடந்த ஆட்சிக்காலத்தில் நடப்பதுபோன்ற விடயங்கள் நடக்கும்போது அதனை நாங்கள் கண்டிக்காமல் இருக்கமுடியாது. 

நேற்று தையிட்டியில் நடைபெற்ற முர்க்கத்தனமான செயற்பாட்டினை, பலாத்காரமான செயற்பாட்டினை நாங்கள் கண்டிக்கின்றோம். காவியுடை தரித்த இந்து படித்த துறவினை மிக கேவலமான முறையில் பொலிஸார் நடாத்தியுள்ளனர். அதேநேரம் பிக்குகளாக இருந்து எவ்வளவு அட்டகாசம் செய்தாலும் கூட அவர்களை மிக கன்னியமாக அனுகுகின்றனர் என தெரிவித்தார்.

--

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara