Header Logo

செய்திகள்
உயிருக்குப் பாதுகாப்பு கோரி சூரியகந்த பொலிஸ் கான்ஸ்டபிள் முறைப்பாடு

Dec 28, 2025 - 08:40 PM -

0

உயிருக்குப் பாதுகாப்பு கோரி சூரியகந்த பொலிஸ் கான்ஸ்டபிள் முறைப்பாடு

பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்ம குமாரவுடன் ஏற்பட்ட சம்பவத்தின் பின்னர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள, சூரியகந்த பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (28) கொலோன்ன பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். 

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், தனது உயிருக்கு நிலவும் அச்சுறுத்தல் குறித்து இரத்தினபுரி பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கடந்த 26 ஆம் திகதி முன்வைத்த எழுத்துமூல முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே வருகை தந்ததாகக் குறிப்பிட்டார். 

தன்னைத் தாக்கிய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும், அவர்கள் சுதந்திரமாக நடமாடுவது தனது மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இதன் காரணமாகவே தான் பொலிஸாரிடம் பாதுகாப்பு கோரியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை தனக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் மேலும் தெரிவித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

title