பல்சுவை
கள்ளக்காதலனுக்கு உதவிய தாய்!

Jan 5, 2026 - 05:11 PM -

0

கள்ளக்காதலனுக்கு உதவிய தாய்!

இந்தியாவின் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி முஸ்லிம்பூர் பகுதியைச் சேர்ந்த ஜபியுல்லா என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதான கதீஜா ஜல் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். 

ஆனால், கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தன. இதன் விளைவாக, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வந்தனர். 

விவாகரத்துக்குப் பின் கதீஜா ஜல், தனது குழந்தைகளுடன் கபூராபாத் பகுதியில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் இர்ஃபான் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இப்பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாறி, கள்ளக்காதலாக வளர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்தச் சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இர்ஃபான், கதீஜாவின் 7 ஆம் வகுப்பு படிக்கும் மகளுடன் உறவு கொள்ள விரும்பியுள்ளார். இதனை தொடர்ந்து, ஆசை வார்த்தைகள் கூறி ஏலகிரி மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். 

அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக தெரியவந்துள்ளது. வீடு திரும்பிய சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையை தந்தை ஜபியுல்லாவிடம் கதறியபடி தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து, ஜபியுல்லா உடனடியாக வாணியம்பாடி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியானது. சிறுமியை வன்கொடுமை செய்ததற்கு அவரது தாயார் கதீஜா ஜலும் உடந்தையாக இருந்ததும், கள்ளக்காதலனின் விபரீத ஆசையை நிறைவேற்ற மகளை ஏலகிரிக்கு அழைத்து சென்றதும் தெரியவந்தது. 

இதையடுத்து, பொலிஸார் கதீஜா ஜல் மற்றும் இர்ஃபான் ஆகியோரை கைது செய்தனர். இருவர் மீதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

தாயின் கள்ளக்காதலன் சொந்த மகளை வன்கொடுமை செய்த சம்பவமும், அதற்கு தாயே உடந்தையாக இருந்தது தெரியவந்ததும் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது நான்கு குழந்தைகளும் தந்தை ஜபியுல்லாவின் பராமரிப்பில் வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது. 

இச்சம்பவம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை மீண்டும் நினைவூட்டுவதாக உள்ளது. வழக்கு தொடர்பான மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Comments
0

MOST READ
01
02
03
04
05