Header Logo
Mogo Academy

கிழக்கு
போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் மட்டக்களப்பில் கைது!

Jan 6, 2026 - 12:14 PM -

0

போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் மட்டக்களப்பில் கைது!
Mobitel inner

வாழைச்சேனையில் இருந்து காத்தான்குடிக்கு போதைப்பொருள் கடத்திய இரு இளைஞர்களை, 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 10 கிராம் ஹெரோயினுடன் மட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகில் வைத்து நேற்று (05) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, காத்தான்குடி பொலிஸார் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, வாழைச்சேனையில் இருந்து பேருந்தில் வந்து இறங்கிய குறித்த இரு இளைஞர்களையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்கள் பேத்தாழையைச் சேர்ந்த 24 வயதுடையவர் மற்றும் வாகரையைச் சேர்ந்த 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

--

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara