Header Logo
SLIC
உலகம்
15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை!

Jan 28, 2026 - 10:46 AM

15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை!
Mobitel Inner 1278
EDEX Inner

பிரான்ஸில் சிறுவர்களின் மனநலம் மற்றும் உடல்நலனை கருத்தில்கொண்டு 15 வயதுக்குட்பட்டோர் சமூகவலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டமூலம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 

இதற்கு 131 பேர் ஆதரவாகவும், 21 பேர் எதிராகவும் வாக்களித்த நிலையில், சட்டமூலம் வெற்றிகரமாக நிறைவேற்றபட்டது. 

பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் வாக்கெடுப்பை வரவேற்றார். குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரை பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கை என்றும், இளைஞர்கள் ஆன்லைன் தளங்களால் பாதிக்கப்படவோ அல்லது கையாளப்படவோ கூடாது என்றும் அவர் கூறினார். 

இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஜனாதிபதி மேக்ரான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், 

பிரான்ஸ் நாட்டு குழந்தைகளின் மூளைகள் விற்பனைக்கு அல்ல என்றும், கணினி நிரலின் அடிப்படையில் அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் குறிப்பிட்டுள்ளார். 

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஆஸ்திரேலியாவிற்கு பிறகு சிறார்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் 2-வது நாடாக பிரான்ஸ் மாறும். உயர்நிலைப் பாடசாலைகளில் மொபைல் போன்களுக்குத் தடை விதிக்கும் மசோதாவும் இந்த மசோதாவில் அடங்கும்.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278