Jan 30, 2026 - 02:01 PM
By மட்டக்களப்பு நிருபர் சரவணன்
By மட்டக்களப்பு நிருபர் சரவணன்
வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கட்டுமுறிவு பகுதியில் சட்டவிரோதமாக உள்நாட்டு துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.
இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 4 உள்நாட்டு துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன.
வன விலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாட சந்தேகநபர்கள் இந்த துப்பாக்கிகளை பயன்படுத்தியுள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

































