Header Logo
Mogo Academy

கிழக்கு
காத்தான்குடி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறுகிறது!

Jan 31, 2026 - 01:49 PM -

0

காத்தான்குடி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறுகிறது!
Mobitel inner

காத்தான்குடி பிரதான பஸ் தரிப்பு நிலையத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவாக ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதற்காக கடந்த காலங்களில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், வரைபடங்கள் மற்றும் நில அளவைத் திணைக்களத்தின் தொடர்புடைய அனைத்து ஆவணங்களும், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையில், இன்று (31) காத்தான்குடி நகர சபைத் தவிசாளரின் அலுவலகத்தில் பரிசீலிக்கப்பட்டன. 

இதன்போது, குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக மேலதிகமாக தேவையான விடயங்களை தாமதமின்றி ஆவணப்படுத்தி சமர்ப்பிக்குமாறு, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் காத்தான்குடி நகர சபைத் தவிசாளரிடம் கோரிக்கை விடுத்தார். 

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் வேண்டுகோளின் பேரில் முன்வைக்கப்பட்ட இவ்வேலைத்திட்டம், நீண்டகாலமாக பிரதேச அபிவிருத்திக் குழுவின் அனுமதிக்காக காத்திருந்த நிலையில், நேற்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. 

குறித்த பிரதான பஸ் தரிப்பு நிலைய வேலைத்திட்டம், உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara