Header Logo
Mogo Academy

ஏனையவை
புத்தளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

Feb 2, 2026 - 10:05 AM -

0

புத்தளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!
Mobitel inner

புத்தளம் - கற்பிட்டி , கண்டக்குளி கடற்கரை வீதியில் கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் இடம்பெற்ற கடந்த 30 ஆம் திகதி குறித்த வீதியில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டனர். 

இதன்போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், அங்கிருந்தவர்களால் அவ்விருவரையும் சிகிச்சைக்காக உடனடியாக கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதனையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக அவ்விருவரும் கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் இருந்து புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இருவரில், ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக காணப்பட்டதுடன், அவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவிற்கு அன்றைய தினமே மாற்றப்பட்டிருந்தார். 

இவ்வாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தவர் கடந்த 31 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

நுரைச்சோலை - கொய்யாவாடி , அரபா நகர் பகுதியைச் சேர்ந்த முஹம்மது நிஜாம் முஹம்மது சன்பர்கான் (வயது 28) எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் கூறினர். 

விபத்தில் காயமடைந்த மற்றைய நபர் தொடர்ந்தும் புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். 

விபத்துச் சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

--

MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara