Header Logo
SLIC
உலகம்
மியன்மார் மாஃபியா கும்பலைச் சேர்ந்த மேலும் நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Feb 2, 2026 - 02:02 PM

மியன்மார் மாஃபியா கும்பலைச் சேர்ந்த மேலும் நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
Mobitel Inner 1278
EDEX Inner

மியன்மாரில் இணையவழி மோசடி மையங்களை நடத்தி வந்த மிக முக்கியமான 'பாய்' குடும்ப மாஃபியா கும்பலைச் சேர்ந்த நான்கு பேருக்கு சீனா மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. 

மோசடி, கொலை, திட்டமிட்ட தாக்குதல் மற்றும் பிற குற்றங்களுக்காக இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மற்றும் இவர்களுடன் தொடர்புடைய 21 பேருக்கு சீன நீதிமன்றம் தண்டனை வழங்கியது. 

கடந்த நவம்பர் மாதம், இந்தக் கும்பலின் தலைவர் பாய் சுவோசெங் (Bai Suocheng) உட்பட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 

இதில் பாய் சுவோசெங் சிறையிலேயே உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், எஞ்சிய நால்வருக்கு தற்போது தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

கடந்த வாரம் இதே போன்ற குற்றங்களுக்காக 'மிங்' (Ming) குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு சீனா மரண தண்டனை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. 

மியன்மார் எல்லையில் உள்ள லௌக்கைங் (Laukkaing) பகுதியில் பாய் மற்றும் மிங் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக சூதாட்ட விடுதிகள் மற்றும் பாலியல் தொழில் மையங்களை நடத்தி வந்தனர். 

சுமார் 41 பிரம்மாண்ட வளாகங்களில் இணைய மோசடி மையங்களை இவர்கள் நடத்தி வந்தனர். அங்கு கடத்தி வரப்படுபவர்கள் அடித்துத் துன்புறுத்தப்படுவதும், சித்திரவதை செய்யப்படுவதும் வாடிக்கையாக இருந்துள்ளது. 

இவர்களின் குற்றச்செயல்களால் 6 சீனக் குடிமக்கள் கொல்லப்பட்டனர், ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் மற்றும் பலர் காயமடைந்தனர். 

மியன்மாரின் தற்போதைய ராணுவ ஆட்சியாளர் மின் ஆங் ஹ்லைங்கின் ஆதரவுடன் இந்தக் குடும்பம் லௌக்கைங் பகுதியில் அசுர வளர்ச்சி அடைந்தது. 

மியன்மார் ராணுவம் இந்த மோசடி கும்பல்களைக் கட்டுப்படுத்தாததால் அதிருப்தியடைந்த சீனா, அங்குள்ள கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்தது. இதன் விளைவாக, இந்த மாஃபியா கும்பல்கள் பிடிபட்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி, தென்கிழக்கு ஆசியாவில் இது போன்ற இணைய மோசடிகளில் ஈடுபடுத்துவதற்காக லட்சக்கணக்கான மக்கள் கடத்தி வரப்பட்டுள்ளனர். 

இவர்களிடம் சிக்கி பல கோடி டொலர்களை மக்கள் இழந்து வருகின்றனர். இந்த மரண தண்டனைகள் மூலம், ஏனைய மோசடி கும்பல்களுக்கு சீனா ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278