Header Logo
SLIC
உலகம்
உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்

Feb 3, 2026 - 09:13 AM

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்
Mobitel Inner 1278
EDEX Inner

உக்ரைன் கடும் குளிரை எதிர்கொண்டு வரும் நிலையில், ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் முக்கிய நகரங்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. 

இந்த இடைவேளையைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை ரஷ்யா உக்ரைன் தலைநகர் கீவ் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளால் தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள்காட்டி வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

கீவ் நகரில் பல பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் "தனிப்பட்ட வேண்டுகோளுக்கு" இணங்க, உக்ரைனின் முக்கிய நகரங்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை ஞாயிற்றுக்கிழமை வரை நிறுத்தி வைக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த வாரம் ஒப்புக்கொண்டதாக கிரெம்ளின் மாளிகை தெரிவித்திருந்தது. 

2022 பெப்ரவரியில் மாஸ்கோ உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கிய பின்னர், ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே அபுதாபியில் நடைபெற்ற முதலாவது முத்தரப்புப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. 

கீவ் நகரில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக கீவ் இராணுவ நிர்வாகத்தின் தலைவர் தைமூர் தகசென்கோ (Tymur Tkachenko) டெலிகிராமில் பதிவிட்டுள்ளார். 

அதேவேளை, கிழக்கு உக்ரைனில் உள்ள டினிப்ரோ (Dnipro) நகரமும் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. 

கடந்த வியாழக்கிழமை முதல் எரிசக்தி நிலையங்கள் அல்லது முக்கிய நகரங்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என்று உக்ரைன் அதிகாரிகள் கூறியிருந்தாலும், தளவாடப் போக்குவரத்து வழிகள் மற்றும் போக்குவரத்து உட்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. 

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான அடுத்த சுற்று முத்தரப்புப் பேச்சுவார்த்தை புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அபுதாபியில் நடைபெறும் என்பதை கிரெம்ளின் உறுதிப்படுத்தியுள்ளது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278