Header Logo
SLIC
உலகம்
நோபல் பரிசு பெற்ற பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை!

Feb 9, 2026 - 06:14 AM

நோபல் பரிசு பெற்ற பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை!
Mobitel Inner 1278
EDEX Inner

ஈரானைச் சேர்ந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நா்கீஸ் முகமதிக்கு மேலும் ஏழாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

ஈரான் நாட்டைச் சோ்ந்த நா்கீஸ் முகமதி (53), அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

இதற்கிடையே, ஈரானில் ஹிஜாப் அணியாததால் பொலிஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாஷா அமீனி (22) என்ற பெண் உயிரிழந்தார். இதையடுத்து, அந்நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. 

இந்தப் போராட்டத்துக்கு நர்கீஸ் முகமதி சிறையில் இருந்தே ஆதரவு திரட்டினார். இதனால் அவரது புகழ் மேலும் அதிகரித்தது. இதைத்தொடா்ந்து, கடந்த 2023 இல் அமைதிக்கான நோபல் பரிசு நா்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டது. 

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற 19 ஆவது பெண் மற்றும் ஈரானின் 2 ஆவது பெண் ஆவாா் நர்கீஸ் முகமதி. 

இந்நிலையில், கடந்த 2 ஆம் திகதியிலிருந்து அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தச் செயலுக்காக நா்கீஸ் முகமதிக்கு மேலும் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து ஈரான் அரசு உத்தரவிட்டது.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278