Header Logo
SLIC
உலகம்
அமெரிக்கா - அர்மேனியா இடையே சிவில் அணுசக்தி ஒப்பந்தம் கைச்சாத்து

Feb 10, 2026 - 09:10 AM

அமெரிக்கா - அர்மேனியா இடையே சிவில் அணுசக்தி ஒப்பந்தம் கைச்சாத்து
Mobitel Inner 1278
EDEX Inner

ரஷ்யாவின் முன்னாள் நெருங்கிய நட்பு நாடான அர்மேனியாவுடன் தனது உறவை வலுப்படுத்த வொஷிங்டன் முயற்சிக்கும் நிலையில், சிவில் அணுசக்தி துறையில் ஒத்துழைக்க அர்மேனியாவும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டன. 

இந்த அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையில் அர்மேனியப் பிரதமர் நிக்கோல் பாஷினியன் மற்றும் அர்மேனியாவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) ஆகியோர் கையெழுத்திட்டனர். 

அமெரிக்கா தனது அணுசக்தி தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை சட்டப்பூர்வமாக மற்ற நாடுகளுக்கு வழங்க அனுமதிக்கும் '123 ஒப்பந்தம்' எனப்படும் உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகளை தாங்கள் நிறைவு செய்துள்ளதாக இருவரும் தெரிவித்தனர். 

இந்த ஒப்பந்தத்தின் மூலம் அர்மேனியாவுக்கான ஆரம்பகட்ட அமெரிக்க ஏற்றுமதியாக 5 பில்லியன் டொலர் வரையிலும், அத்துடன் மேலதிகமாக நீண்டகால எரிபொருள் மற்றும் பராமரிப்பு ஒப்பந்தங்களாக 4 பில்லியன் டொலர் வரையிலும் அனுமதிக்கப்படும் என்று வான்ஸ் கூறினார். 

"இந்த ஒப்பந்தம் அர்மேனியா மற்றும் அமெரிக்கா இடையிலான எரிசக்தி கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறக்கும்" என்று வான்ஸ் உடனான கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் பாஷினியன் தெரிவித்தார். 

தனது எரிசக்தி தேவைகளுக்காக நீண்டகாலமாக ரஷ்யா மற்றும் ஈரானில் பெரிதும் தங்கியிருக்கும் அர்மேனியா, தற்போது பழமையான மற்றும் ரஷ்யாவால் கட்டப்பட்ட தனது ஒரே அணுமின் நிலையமான மெட்சமோர் (Metsamor) நிலையத்திற்குப் பதிலாக புதிய அணுஉலையை நிர்மாணிப்பதற்காக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் தென் கொரிய நிறுவனங்களின் முன்மொழிவுகளைப் பரிசீலித்து வருகிறது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278