Header Logo
SLIC
மலையகம்
தொழிலாளர்களின் சுமைகளை அதிகரிக்க வேண்டாம்!

Feb 10, 2026 - 09:36 AM

தொழிலாளர்களின் சுமைகளை அதிகரிக்க வேண்டாம்!
Mobitel Inner 1278
EDEX Inner

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்கப் பெறுவது எங்களுக்கு மகிழ்ச்சி ஆனால் அவர்களுக்கு தொழில் சுமை அதிகரிக்க கூடாது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும், பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரமும் தெரிவித்துள்ளனர். 

தற்போது தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு 1,750 ரூபா சம்பளத்தை வழங்க வேண்டுமானால், ஒரு நாளைக்கு பறிக்க வேண்டிய கொழுந்தின் அளவை 20 கிலோவிலிருந்து 25 கிலோவாக உயர்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிபந்தனையால் தொழிலாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக பல தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்வதற்கு தயக்கம் காட்டியும் வருகின்றன எனவும் ஹட்டனில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்தனர். 

மேலும் தோட்ட முகாமையாளரால் பணிநீக்கம் செய்யப்பட்ட, கவரவலை தோட்ட தொழிலாளர்களின் சத்தியாகிரக போராட்டம் தொடர்பில், ஹட்டன் பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி காரியாலயத்தில், பேச்சு வார்த்தை ஒன்றினையும் கடந்த 08 ஆம் திகதி பிற்பகல் ஏற்பாடு செய்திருந்தனர். 

இதன்போது குறித்து தொழிலாளர்களுக்கு உடனடியாக தொழிலை வழங்க வேண்டும் எனவும் இவர்களுக்கு முகாமையாளர்களால் இனிவரும் நாட்களிலும் எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் மற்றும் தொழில் பாதுகாப்பு தொடர்பில் தாம் கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. 

குறித்த கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோகணேசன், பழனி திகாம்பரம் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கணபதி நகுலேஸ்வரன், மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார், மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர்கள், பணி இடைநிறுத்தம் செய்யபட்ட 8 தொழிலாளர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278