Header Logo
Mogo Academy

கிழக்கு
உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட காட்டுயானை!

Feb 12, 2026 - 01:32 PM -

0

உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட காட்டுயானை!
Mobitel inner

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் காட்டுயானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

திக்கோடை புதிய வீட்டுத்திட்டப்பகுதிக்கு அருகாமையில் நேற்று (11) இரவு உணவு தேடி வந்த யானையே மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விளைநிலங்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கியே இவ்வாறு உயிரிழந்துள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த வெல்லாவெளி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர். 

இதன் அடிப்படையில், மின்சார வேலி அமைக்கப்பட்டிருந்த காணியின் உரிமையாளரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் நேற்று கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

தற்பொழுது வனவிலங்கு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் வெல்லாவெளி பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

அண்மைக்காலமாக போரதீவுப்பற்று மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் மனித - யானை மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இவ்வாறான மின்சார வேலி அமைக்கும் நடவடிக்கைகள் யானைகளின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக சூழலியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

--

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara