Header Logo
SLIC
உலகம்
சீனாவின் படகொன்றை தடுத்த ஜப்பான்

Feb 13, 2026 - 11:16 AM

 சீனாவின் படகொன்றை தடுத்த ஜப்பான்
Mobitel Inner 1278
EDEX Inner

சீன மீன்பிடி படகு ஒன்றை ஜப்பானிய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 

இந்த நடவடிக்கையானது சீனாவுடனான பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள நாகசாகி மாகாணத்திற்கு அப்பால் உள்ள ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார வலையத்திற்குள் வைத்து இந்தப் படகு இடைமறிக்கப்பட்டதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

குறித்தப் படகைப் சோதனைக்கு உட்படுத்துவதற்காக நிறுத்துமாறு கட்டளையிடப்பட்டுள்ளது. 

எனினும் அந்த கட்டளையையும் மீறி இந்த சீன மீன்பிடி படகு பயணித்துள்ள போதே, அது அதிகாரிகளால் தடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 

இதனையடுத்து படகில் இருந்த கெப்டன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

47 வயதான சீன நாட்டவரே படகின் கெப்டன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

2022 ஆம் ஆண்டிற்குப் பிறகு சீன மீன்பிடி படகு ஒன்றை ஜப்பானிய அதிகாரிகள் கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும். 

எவ்வாறாயினும் இது குறித்து சீனா இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278