Header Logo
SLIC
உலகம்
சூடானில் 6000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. குற்றச்சாட்டு

Feb 16, 2026 - 07:16 AM

சூடானில் 6000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. குற்றச்சாட்டு
Mobitel Inner 1278
EDEX Inner

சூடானில் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டில் பயங்கரமான உள்நாட்டுப் போர் வெடித்தது. 

நாட்டின் அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டியே இந்த போருக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. 

இராணுவம் தரப்பில் ஜெனரல் அப்தெல் பத்தா அல்-புர்ஹான் தலைமையிலான 'சூடான் ஆயுதப் படைகள் செயல்படுகின்றன. 

துணை இராணுவம் தரப்பில் முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்.எஸ்.எப். எனப்படும் விரைவு அதிரடிப் படை செயல்பட்டு வருகின்றன. 

தொடக்கத்தில் இருவரும் இணைந்து ஆட்சியைப் பிடித்தாலும், பிறகு துணை இராணுவத்தை அதிகாரப்பூர்வ இராணுவத்துடன் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் மோதல் ஏற்பட்டது. 

இந்நிலையில் டார்பூர் மாகாணத்தில் உள்ள எல்-பாஷர் நகரை கைப்பற்றுவதற்காக ஆர்.எஸ்.எப். படைகள் கடந்த அக்டோபர் மாதம் கொடூர தாக்குதலை நடத்தின. 

அப்போது அக்டோபர் 25 முதல் 27 வரையிலான வெறும் 3 நாட்களில் மட்டும் 4 ஆயிரத்து 400 அப்பாவி பொதுமக்கள் நகருக்குள்ளேயே வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். 

தப்பி ஓட முயன்ற குழந்தைகள் உள்பட 1,600 பேரை எல்லையில் வைத்து எந்திர துப்பாக்கியால் சுட்டு கொன்று குவித்தனர். 

துணை இராணுவப் படையினர் நடத்திய கோரத் தாக்குதலில் ஒரே வாரத் தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தகவலை வெளியிட் டது. 

மேலும், ஆப்பிரிக்க பழங்குடியின பெண்களை குறிவைத்து ஆர்.எஸ்.எப். படையினர் திட்டமிட்ட முறையில் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டதாகவும் ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது. 

குழந்தைகளுக்கான வைத்தியசாலையை சிறைச்சாலையாக மாற்றி ஆயிரக்கணக்கானோரை அடைத்து வைத்து சித்தரவதை செய்ததாகவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் தெரிவித்தார்.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278