Feb 16, 2026 - 12:49 PM
By மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்
By மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்
தலங்கம, அக்குரோகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் இன்று (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்பாக ஒன்றுகூடிய சட்டத்தரணிகள் அமைதியான முறையில் போராட்டத்தினை முன்னெடுத்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் தியாகேஸ்வரன் தலைமையில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சட்ட ஒழுங்கினை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதுடன் சட்டத்தரணிகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படவேண்டும் என இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

































