Header Logo
SLIC
உலகம்
ஒலிம்பிக் கிராமத்தில் ஆணுறைக்கு கடும் தட்டுப்பாடு!

Feb 16, 2026 - 01:18 PM

ஒலிம்பிக் கிராமத்தில் ஆணுறைக்கு கடும் தட்டுப்பாடு!
Mobitel Inner 1278
EDEX Inner

இத்தாலியின் மிலான் மற்றும் கோர்டினா நகரங்களில் 2026 ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. அங்கு வீரர்கள் தங்கியுள்ள ஒலிம்பிக் கிராமத்தில் விளையாட்டு வீரர்களுக்கு இலவசமாக உயர்தர அறைகளை தவிர்த்து பல்வேறு வசதிகள் இலவசமாக வழங்கப்படும். இதில் ஆணுறைகளும் அடங்கும். 

வழக்கமாக ஒலிம்பிக் கிராமத்தில் உணவு, குடிநீர் உள்ளிட்டவை தட்டுப்பாடு என்ற புகார்கள் எழும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள தட்டுபாடு சற்று வித்தியாசமானது. மிலானில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பித்த 3 நாட்களில் அனைத்து ஆணுறைகளும் தீர்ந்துவிட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. உலகம் முழுவதும் 3 ஆயிரம் வீரர்கள் கலந்து கொண்டதை தொடர்ந்து இலவசமாக 10 ஆயிரம் ஆணுறைகள் வழங்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் அவை அனைத்தும் அங்கு தீர்ந்துவிட்டது. 

1988 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் எச்.ஐ.வி. தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு இலவசமாக ஆணுறைகள் கொடுக்கும் மரபு உருவானது. கடந்த 2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வீரர்களுக்கு 3 லட்சம் ஆணுறைகள் கொடுக்கப்பட்டது. 

2026 ஆம் ஆண்டு அதிகபட்சமாக 4 லட்சம் ஆணுறைகள் வழங்கப்பட்டன. இதற்கு நேர்மாறாக மிலானில் குறைந்த அளவில் அதாவது வெறும் 10 ஆயிரம் தான் வழங்கப்பட்டுள்ளது. இதுவே ஆணுறைகள் தட்டுப் பாட்டுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ் கூறுகையில், 

"ஒலிம்பிக் கிராமத்தில் ஒலிம்பிக் சாசனத்தின் விதி 62-ன் படி, கண்டிப்பாக ஆணுறை வழங்கப்பட வேண்டும். எதிர்பார்த்ததை விடத் தேவை அதிகமாக உள்ளதால், கூடுதல் விநியோகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் முடியும் வரை தட்டுப்பாடு வராமல் தொடர்ந்து இருப்பு வைக்கப்படும்" என தெரிவித்தார்.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278