Feb 17, 2026 - 10:46 AM
By மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்
By மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்
பலத்த மழைக்கும் மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் கா.பொ.த.சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமானது.
2025 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த.சாதாரண தர பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பமான நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் பரீட்சைகள் ஆரம்பமானது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழைபெய்துவரும் நிலையிலும் மாணவர்கள் இன்று (17) காலை ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை முன்னெடுத்த நிலையில் பரீட்சை நிலையங்களுக்கு வருகைதந்ததை காணமுடிந்தது.

































