Header Logo
SLIC
கிழக்கு
புதிய பள்ளிவாசலை திறந்து வைத்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்!

Feb 20, 2026 - 04:03 PM

புதிய பள்ளிவாசலை திறந்து வைத்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்!
Mobitel Inner 1278
EDEX Inner

ஹிரா பவுண்டேஷன் அனுசரணையில் காத்தான்குடி கர்பலா கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஜாமிஉல் மனார் ஜும்ஆ பள்ளிவாசலை, ஹிரா பவுண்டேஷன் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று (20) ஜும்ஆ தொழுகையின் பின்னர் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். 

இதன் போது உரையாற்றிய அவர், 

“இப்புதிய ஜும்ஆ பள்ளிவாசலுடன் இணைந்து ஜனாஷா குளிப்பாட்டும் இடத்தையும் திறந்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணிக்கும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஜனாஷாக்களை குளிப்பாட்டுவதில் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். இதனை கருத்திற்கொண்டு, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக ஜனாஷா குளிப்பாட்டுவதற்கான வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

வைத்தியர் அகமட் பரீட் உருவாக்கப்பட்ட இந்த கிராமத்தில் இவ்வாறான ஒரு பெரிய ஜும்ஆ பள்ளிவாசலை கட்டி திறந்து வைப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” எனத் தெரிவித்தார். 

மேலும், இத்திட்டத்திற்கு உதவிய சவூதி அரேபியாவைச் சேர்ந்த தனவந்தர்களுக்கும், ஹிரா பவுண்டேஷன் செயலாளர் மும்தாஸ் மதனி உட்பட பள்ளிவாசல் நிர்வாகத்தினர், நலன்விரும்பிகள் அனைவருக்கும் அவர் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
Mobitel 1278