Header Logo
SLIC
மலையகம்
பிள்ளைகளை சுமந்து ஆற்றை கடக்கும் பெற்றோர்கள்!

Feb 24, 2026 - 12:23 PM

பிள்ளைகளை சுமந்து ஆற்றை கடக்கும் பெற்றோர்கள்!
Mobitel Inner 1278
EDEX Inner

கடந்த வருடம் (2025) நவம்பர் மாதம் ஏற்பட்ட மோசமான காலநிலை காரணமாக நுவரெலியா - லிந்துலை, மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்கு செல்லும் பகுதியில் ஆக்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இரும்பு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்தது இதனால் முழுமையாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்கின்றனர். 

குறிப்பாக லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்திற்கு கீழ் இயங்கும் மிளகுசேனை, ஊட்டுவெளி மற்றும் சென்டறர்கிளாஸ் போன்ற பகுதிகளில் வாழும் 800 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்த சென்று வருகின்றனர். 

மேலும் சிறிய மழை பெய்து ஆற்றில் நீர் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் வசிக்கும் மக்கள் அந்த ஆற்று வழியாகச் செல்ல முடியாமல் 5 கி.மீ. தூரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தொடர்ந்து எதிர் வரும் நாட்களில் அதிக மழை பெய்து ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் கூட கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடி யாத நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கின்றன. 

லிந்துலை, மெராயா தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 450 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் ஆற்றில் மறுபக்கம் கரையில் தமது பாதணிகளைக் கழற்றி கையிலெடுத்துக் கொண்டு ஆற்று நீரைக் கடந்து வந்து மீண்டும் வீதியோரங்களில் சுத்தமான நீரில் கால்களை கழுவி மீண்டும் பாதணிகளை அணிந்து கொண்டு செல்வதைக் காணமுடிகிறது ஆசிரியர்களும், அரசு மற்றும் தனியார் அலுவலக உத்தியோகத்தர்களும் அவ்வாறே சென்று வருகின்றனர். 

இதில் பாடசாலை செல்லும் சிறிய மாணவர்களை பெற்றோர் தோளில் தூக்கி சுமந்து கொண்டு, ஆற்றின் நடுவே கடந்து பாடசாலைக்கு அனுப்பி வைக்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக கிராம மக்கள் தெரிவிக்கையில், 

விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு நாங்கள் வாழ்ந்து வருகிறோம், உணவுக்காக அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டும் என்றால் நுவரெலியா பிரதான நகருக்கோ அல்லது மெராயா நகருக்கோ செல்ல வேண்டும் தற்போது வெள்ளத்தில் அடித்து சென்ற பாலத்தினை இன்று வரை செய்து கொடுக்காமல் இருப்பதால் ஆற்றில் இறங்கி பல்வேறு சிரமங்களுக்கு இடையில் சென்று வருகிறோம். 

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் விவசாய பொருட்களை வாங்கிய பின்னர் தலைச்சுமையாக ஆற்றைக் கடந்து ஊருக்கு வருவதில் சிரமம் ஏற்படுகிறது. 

பலநேரங்களில் முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் சில பொருட்களை ஆற்றில் தவறவிடுவதும் உண்டு ஆற்றில் தண்ணீர் அதிகம் வரும்போது சுற்று வீதி வழியாக 5 கிமீ தூரம் சுற்றி முச்சக்கரவண்டி அல்லது இருசக்கர வாகனங்களில் சென்று பொருட்களை வாங்கும் நிலையுள்ளது எனத் தெரிவித்தனர். 

எனவே உடனடியாக பாதுகாக்க சென்று வர தற்காலிகமாக ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர். 

இதனால் பலரும் பயன்பெறுவார்கள் எனவும் இதற்கு பொறுப்பான அதிகாரிகள் இக்கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278