Header Logo
SLIC
சினிமா
நானியின் “தி பாரடைஸ்” படத்தின் 2 ஆவது பாடல் அப்டேட்!

Aug 27, 2026 - 03:46 PM

நானியின் “தி பாரடைஸ்” படத்தின் 2 ஆவது பாடல் அப்டேட்!
Mobitel Inner 1278
EDEX Inner

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ படத்தின் 2 ஆவது பாடல் நாளை (28) வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

நானி நடிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘தசரா’. ‘தசரா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33 ஆவது படமான ‘தி பாரடைஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது. ‘தசரா’ படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 

நானி நடிப்பில் கடைசியாக வெளியான சரிபோத சனிவாரம், ஹிட் 3 திரைப்படங்கள் வசூல் ரீதியாக 100 கோடி ரூபாயைக் கடந்ததால் அவரது படங்களின் பட்ஜெட்டும் அதிகரித்து வருகின்றன. 

அனிருத் இசையமைத்து வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 24 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர்கள் மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இப்படத்தின் பாடலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு நடனமாட உள்ளதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீகாந்த் ஒடேசா இயக்கத்தில் தசரா திரைப்படத்தில் நானி - கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆயா சேர்’ பாடல் யூடியூபில் 20 கோடி பார்வைகளை கடந்துள்ளது. அனிருத் இசையமைத்த இப்பாடலை அதுல்லா ஜாங்கிரெட்டி, அர்ஜுன் சாண்டி பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

1980 களின் கதைக்களத்தை கொண்டுள்ள இப்படம், செகந்திராபாத்தில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின சமூகம், அமைப்புரீதியான அடக்குமுறையை எதிர்த்து குடியுரிமைக்காகப் போராடுவதை காட்டுகிறது. 

நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. டீசர் காட்சிகளில் இடம்பெற்ற மேக்கிங் மற்றும் சண்டைக் காட்சிகளுடன் கூடிய அனிருத்தின் பின்னணி இசைகளுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படம் செப்டம்பர் 24 ஆம் திகதி வெளியாகவுள்ளது. 

இந்நிலையில், ‘தி பாரடைஸ்’ படத்தின் 2 ஆவது பாடல் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278