Header Logo
SLIC
மலையகம்
வறுமையைக் கடந்து யோகாவில் மிளிரும் 11 வயது சிறுமி!

Feb 25, 2026 - 11:10 AM

வறுமையைக் கடந்து யோகாவில் மிளிரும் 11 வயது சிறுமி!
Mobitel Inner 1278
EDEX Inner

ஆசிரியர் இன்றி யோகா மற்றும் ஜிம்னாஸ்டிக் கலைகளைத் தாமாகவே கற்று, அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி வரும் மாணவி ஒருவரின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நுவரெலியா மாவட்டம், அக்கரபத்தனை அல்டோரா போட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த இவர், அக்கரபத்தனை தமிழ் மகா வித்தியாலயத்தில் ஏழாம் ஆண்டில் கல்வி பயிலும் 11 வயதுடைய சசிகுமார் திருசிகா ஆவார். 

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியைப் பார்த்து, அதுபோலவே தானும் செய்ய வேண்டும் என்ற ஆவலில் யாருடைய துணையுமின்றி யோகா கலையைப் பயின்றதாக அம்மாணவி தெரிவித்தார். தனது திறமையை பல்வேறு மேடைகளில் நிகழ்த்திக் காட்டியதன் மூலம், பல நிறுவனங்களிடமிருந்து சான்றிதழ்களையும், பதக்கங்களையும், நினைவுச் சின்னங்களையும் அவர் பெற்றுள்ளார். இருப்பினும், வறுமை காரணமாக இந்த உயரிய கலையை உலகறியச் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், தொடர்ச்சியாகக் கற்று இதனைப் பலருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் அவர் குறிப்பிட்டார். 

பல வருடப் பயிற்சியின் பின்னர், யோகா கலையில் கடினமான சாகச ஆசனங்களையும், அதன் மூலம் தான் புதிதாக உருவாக்கிய நடனங்களையும் அவர் நிகழ்த்திக் காட்டி வருகிறார். எவ்வித வசதிகளும் இல்லாத நிலையில், தனது வீட்டில் உள்ள ஒரு மெத்தையை (Mattress) மட்டுமே பயன்படுத்தி அவர் இந்தச் சாகசங்களைப் பயின்றுள்ளார் என தெரிவித்தார்.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278