Header Logo
SLIC
மலையகம்
ஹட்டன் குடாகம வனப்பகுதியில் விஷமிகளால் தீ வைப்பு

Feb 26, 2026 - 10:31 AM

ஹட்டன் குடாகம வனப்பகுதியில் விஷமிகளால் தீ வைப்பு
Mobitel Inner 1278
EDEX Inner

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம புகையிரத பாதைக்கு அருகாமையிலுள்ள வன பாதுகாப்புப் பகுதிக்கு, நேற்று (25) மாலை இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. 

இத்தீப்பரவல் காரணமாக பல ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

இந்தத் தீ விபத்தின் காரணமாக இலங்கைக்குக்கே உரித்தான அரிய வகை தாவரங்கள், மூலிகைச் செடிகள் மற்றும் சிறிய வகை உயிரினங்கள் அழிந்து போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

மேலும், வறட்சிக் காலங்களில் காடுகளுக்குத் தீ வைக்கப்படுவதால் நீரூற்றுகள் வற்றிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது வரும் காலங்களில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

காடுகள் அழிவதனால் சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட விலங்குகள் உணவு தேடி மனிதர்கள் வாழும் குடியிருப்புகளை நோக்கி வரக்கூடும் எனப் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். 

விலங்குகளை வேட்டையாடுவதற்காக அல்லது பொழுதுபோக்குக்காகச் சமூக விரோதிகள் இவ்வாறான தீ வைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் எனப் பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

இயற்கையை அழிக்கும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பிலிருந்து பலத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278