Header Logo
SLIC
மலையகம்
நகைக்கடையில் நூதன முறையில் திருடிய நபர் கைது!

Feb 27, 2026 - 10:43 AM

நகைக்கடையில் நூதன முறையில் திருடிய நபர் கைது!
Mobitel Inner 1278
EDEX Inner

தலவாக்கலை நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் நூதன முறையில் தங்க நகையைத் திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (26) காலை இடம்பெற்றுள்ளது. 

திருடப்பட்ட நகையைச் சந்தேக நபர் அருகில் உள்ள வேறொரு நகைக்கடையில் அடகு வைத்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக எமது செயதியாளர் தெரிவித்தார். 

சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, 

தலவாக்கலை நகரில் தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியில் பஸ்தரிப்பு நிலையத்திற்கு சமீபமாக உள்ள நகை கடையொன்றில் நகை வாங்குவது போல் பாவனை செய்து தங்க மோதிரம் ஒ;னிறனை மிகவும் நூதன முறைய களவாடி கடை உரிமையாளரை திசை திருப்பிவிட்டு பணப்பையினை எடுப்பது போல் பணத்தினை எடுத்து மோதிரத்தினை பணத்துடன் சுருட்டி தனது காட்சட்டை பக்கட்டில் வைக்கும் காட்சி கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது. 

தலவாக்கலை - நுவரெலியா பிரதான வீதியில், பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள நகைக்கடை ஒன்றிற்கு நகை வாங்குவது போல் வந்த நபர், உரிமையாளரைத் திசை திருப்பி நூதன முறையில் தங்க மோதிரம் ஒன்றைத் திருடியுள்ளார். தனது பணப்பையை எடுப்பது போல் பாசாங்கு செய்து, மோதிரத்தைப் பணத்துடன் சேர்த்துச் சுருட்டித் தனது காற்சட்டைப் பையில் (Pocket) வைத்துள்ளார். இக்காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளன. 

சிறிது நேரத்தின் பின் மோதிரம் ஒன்று குறைவாக இருப்பதைக் கவனித்த உரிமையாளரின் மனைவி, சிசிடிவி காட்சிகளைச் சோதித்தபோது நகை திருடப்பட்டதை உறுதி செய்தார். அதனைத் தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டபோது, குறித்த நபர் கடைக்கு எதிரே உள்ள வேறொரு கடையில் இருப்பதைக் கண்டு அவரை மடக்கிப் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 

பொலிஸார் நடத்திய விசாரணையில், திருடப்பட்ட மோதிரம் அருகிலிருந்த அடகு கடை ஒன்றில் அடகு வைக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. 

இதேவேளை, கடந்த 25 ஆம் திகதி தலவாக்கலை நகரின் சுற்றுவட்டத்திற்கு அருகில் உள்ள மற்றொரு நகைக்கடையிலும் இதேபோன்று நூதன முறையில் தங்க நகை திருடப்பட்டிருந்தது. அக்காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியுள்ள போதிலும், அந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278