Header Logo
SLIC
கிழக்கு
குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை தாக்குதலில் மூதாட்டி பலி!

Feb 27, 2026 - 01:27 PM

குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை தாக்குதலில் மூதாட்டி பலி!
Mobitel Inner 1278
EDEX Inner

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை, முனைக்காடு குடியிருப்புப் பகுதிக்குள் இன்று (27) அதிகாலை புகுந்த காட்டு யானை நடத்திய தாக்குதலில் 74 வயதுடைய மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். முனைக்காடு மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி சிவபாக்கியம் (74) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

மேலும், 44, 62 வயதுடைய இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குடியிருப்புப் பகுதிக்குள் ஊடுருவிய காட்டு யானை, அங்கிருந்த வீடொன்றையும் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளது. யானையின் அட்டகாசம் காரணமாக முனைக்காடு பகுதி மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். தற்போது வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து, குடியிருப்புப் பகுதிக்குள் நிலைகொண்டுள்ள யானையை வெளியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக நகர் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் காட்டு யானைகள் ஊடுருவித் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 13 ஆம் திகதி வாழைச்சேனை நகருக்குள் புகுந்த யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்ததுடன் நால்வர் படுகாயமடைந்தனர். 

பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி முதல் இன்று வரை மாவட்டத்தில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278