Header Logo
SLIC
Rhythams of Lanka
உலகம்
மினாப் பாடசாலை மீதான தாக்குதல் - 53 பேர் பலி

Mar 1, 2026 - 08:56 AM

மினாப் பாடசாலை மீதான தாக்குதல் - 53 பேர் பலி
Mobitel inner

தெற்கு ஈரானின் ஹோர்முஸ்கான் மாகாணத்திலுள்ள மினாப் நகரில், பெண்கள் ஆரம்பப் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கட்டாயம் பதிலடி கொடுக்கப்படும் என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார். 

ஈரானின் அரச ஊடகமான IRNA வெளியிட்டுள்ள செய்தியில், குறித்த தாக்குதலில் 53 மாணவிகள் கொல்லப்பட்டுள்ளனர். 

இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவிச் சிறுமிகள் என அமைச்சர் அப்பாஸ் அரக்சி கவலை வௌியிட்டுள்ளார். 

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. 

இதேவேளை ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் இஸ்ரேல் தம்மைத் தயார்படுத்தி வரும் நிலையில், அதன் எரிசக்தித் துறை அவசரகால நிலைக்கு மாறத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய நாளிதழான 'ஹாரெட்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. 

இதன் காரணமாக, சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகள் குறைக்கப்பட்டுள்ளதோடு, இயற்கை எரிவாயு உட்கட்டமைப்பின் சில பகுதிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

தீர்த்தோற்சவம்!

தீர்த்தோற்சவம்!

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

தேர்த்திருவிழா!

தேர்த்திருவிழா!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

Mobitel Upahara